“சின்ன படங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்க அரசு ஓ.டி.டி. தளம் தொடங்க வேண்டும்”

-- 'பாரிஸ் கஃபே' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் விஷ்வா வேண்டுகோள்

தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LVஎன்டர்டெயின்மென்ட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே (Paris cafe) படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சராஜ் சீலன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ஜி ஒளிப்பதிவு. தேசிய விருதை வென்ற விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் பேசும் போது, “பாரிஸ் கஃபே ஒரு ஸ்மால் பட்ஜெட் படம். ஆனால் ஒரு ஸ்ட்ராங் மெசேஜ் இருக்கு. நம்ம சமுதாயத்தில் நடக்குற முக்கியமான விஷயம் பத்தி பேசுற படம். குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. படத்தின் இயக்குனர் என்னுடைய கணவர். 20 வருடமா முயற்சி செய்கிறார். ஆனால் சூழ்நிலை அவரை இயக்குநராக விடல. அந்த சூழ்நிலை நான் தான். இந்தப் படத்துக்காக நிறைய புக் ரிசர்ச் பண்ணி இருக்காரு. என்னுடைய கணவரை நினைத்தால் எனக்கு பெருமையா இருக்கு” என்றார்.

படத்தின் இணை தயாரிப்பாளர் லிங்கேஸ்வரன் பேசும் போது, “சினிமாத்துறை எனக்கு புதுசு. இந்தப் படம் முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு இன்னொரு படம் எடுக்க ஆசையா இருக்க காரணம் இந்த படத்தின் இயக்குனர் தான். அந்த அளவுக்கு படத்தை சிறப்பா பண்ணியிருக்கிறார்”
என்றார்.
படத்தின் கலை இயக்குனர் தாமு பேசும் போது,
இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இயக்குனருக்கு லைவ்வை விட செட்டு போட்டு பண்ணா தான் பிடிக்கும். எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க அதற்கு ரொம்ப நன்றி”‘ என்றார்.

படத்தின் எடிட்டர் சாபு பேசும் போது, “என்னோட உதவியாளர் லோகேஷ், மற்றும் பிரகாஷ்க்கு என்னுடைய நன்றி. சரஜ் சீலன் முதல் பட இயக்குனர் மாதிரி தெரியல, எல்லாமே ரொம்ப சிறப்பா பண்ணிருந்தாரு, இயக்குனருடைய
20 வருட கனவு உண்மை ஆகி இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

சிறப்பு விருந்தினர் இயக்குனர் மித்ரன் ஜவகர் பேசும்போது, “ஒரு டைரக்டருக்கு மனைவி ப்ரொடியூசரா கிடைக்கிறது பெரிய அதிர்ஷ்டம், குரு சோமசுந்தரம் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர், இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

சிறப்பு விருந்தினர் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசும்போது, இயக்குனரின் 23 வருட கனவு இது. இதை உண்மையாக்க ஒரு நேர்மை வேண்டும் அது அவர்கிட்ட இருக்கு, இந்தப் படத்தோட தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, இது உண்மைக்கு நெருக்கமான படமா இருக்கும்னு நான் நம்புறேன். ஒரு படத்தின் எழுத்தும் ஒளிப்பதிவும் இருட்டிலிருந்து உருவாவது, எழுத்தாளருக்கும் ஒளிப்பதிவாளர்க
ளுக்கும் இருக்கும் ஒற்றுமையை வழி நடத்திப் போறவர் தான் இயக்குனர், டைரக்டர் ஒவ்வொரு படியா போனாதான் அந்த வழி அவருக்கு தெரியும், கடவுளின் பார்வையில் பார்க்க வேண்டும். நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொள்பவர்களுக்கு தான் ஒரு நீளமான பயணமும் அனுபவமும் கிடைக்கும்” என்றார்.

படத்தில் நடித்த நடிகை நயன சாய் பேசும்போது,” இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு என்னுடைய முதல் நன்றி. என்னுடைய அம்மா எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணி இருக்காங்க. அதற்கு ரொம்ப நன்றி. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோலுடன் நடித்தது சந்தோஷமா இருக்கு. இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்த
இணை இயக்குனர் சாமி அண்ணாவுக்கு ரொம்ப நன்றி . இசையமைப்பாளருக்கும் என்னுடைய நன்றி. பிஆர்ஓ ரியாஸ் சார் மற்றும் பாரஸ் ஆகியோருக்கும் நன்றி. நான் சென்னைக்கு முதல் முறை வந்ததிலிருந்து எனக்கு எல்லா உதவிகளையும் ரியாஸ் செஞ்சு கொடுத்தார். அதற்கு என்னுடைய நன்றி. இந்த படத்தை தியேட்டர்ல பார்த்து எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க. கடவுள் கிட்டயும் நான் வேண்டிக்கிறேன்” என்றார்.

படத்தில் நடித்த நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு என்னுடைய நன்றி. அதற்கு காரணமாக இருந்த சாமி அண்ணனுக்கும் நன்றி. சமீபத்தில் நான் அமெரிக்கா போயிருந்தப்போ தமிழ்ச்
சங்க மேடையில அமைச்சர் ராஜ்மோகன் இருந்தாரு. அந்த விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன் அவருடைய அனுமதியோட ஒரு பாடலை போட்டோம். அது என்னுடைய பாட்டு. அதற்கு கே தான் இசை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி. ரெண்டு யுனிவர்சிட்டி கூட எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒன்னு ஒன்னு ஒண்ணு தமிழ்நாடு யுனிவர்சிட்டி. இன்னொன்னு மலையாளம். யுனிவர்சிட்டி குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் கூட நடிச்சதுல அவங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். அதற்கு என்னுடைய நன்றி. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுதல் . நிறைய சின்ன படங்கள் வருது அதற்கு சரியான அங்கீகாரம் இல்லை.அரசாங்கம் மூலமா ஒரு ஓடிடி தளம் தொடங்கினால் அது எல்லோருக்கும் ரொம்ப உதவியா இருக்கும். இது என்னுடைய வேண்டுகோள். இந்த படம் சொசைட்டிக்கு தேவையான கருத்தை சொல்லி இருக்கு. எல்லாரும் இந்த படத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க” என்றார்

படத்தில் நடித்த நடிகர் பிபின் பேசும்போது, “இந்தப் படம் நான் நடிச்சதிலேயே ரொம்ப வித்தியாசமான படம், இந்தப் படத்தினுடைய கதை ரொம்ப நேர்த்தியானது. குரு சோமசுந்தரம் அனுமோல் கூட நடிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லோருக்கும் நன்றி” என்றார்.

படத்தில் நடித்த நடிகர் சாய் விக்கி பேசும்போது, “இது என்னுடைய முதல் மேடை. நான் சின்ன சின்ன கேரக்டர் பண்ணி இருக்கேன்.ஆனா இந்த படத்துல எனக்கு ஒரு பேர் எல்லாம் கொடுத்து படம் முழுக்க டிராவல் பண்ணி இருக்கேன் அது சந்தோஷமா இருக்கு. ஏழு வருஷமா முயற்சி செஞ்சிட்டு இருக்கேன் இயக்குனர் எனக்கு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கார். ஆனா ஒரு சிலர் இன்ஸ்டாகிராம் மூலமா தான் பட வாய்ப்பு தர்றாங்க. ஆனா இந்த இயக்குனர் அதையெல்லாம் பார்க்காமல் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படம் ஒரு முக்கியமான கருத்தை சொல்லுது, ஒரு ஸ்ட்ராங்கான விஷயத்தை ரொம்ப மென்மையா சொல்லக்கூடிய படம். இசையமைப்பாளர் கே அவர்களுடைய இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய இசையில் நான் நடிச்சதும் எனக்கு சந்தோஷமா இருக்கு. குரு சோமசுந்தரம் மாதிரி ஒரு சிறந்த நடிகர் யாருமே இல்லை. ஜோக்கர் படத்தில் இருந்து நான் அவரை பாலோ பண்றேன். அனுமோல் உங்க கூட நடிச்சதும் சந்தோசமா இருக்கு. கௌசல்யாவுக்கு நடந்தது மத்தவங்கள விட ரொம்ப மோசமானது. அதிலிருந்து அவங்க மீண்டு வந்து இருக்காங்க. அவங்களுக்கு வீரவணக்கம் தான் சொல்லணும். குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை கூட கொலை பண்ணது கிடையாது. ஆனால் காதல் பண்ணா இங்க ஆணவ படுகொலை பண்றாங்க. அந்த சொசைட்டில நாம இருக்கோம், இது மாற ணும் .அதுக்கான படம் தான் பாரிஸ் கஃபே” என்றார்.

படத்தில் நடித்த நடிகை அர்ச்சனா பேசும்போது, “இது என்னுடைய மூன்றாவது படம். என்னுடைய பத்து வருட உழைப்பு. சின்ன வயசுல நிறைய பாடிஷேம் பண்ணி இருக்காங்க ஆனா இப்போ கேமராவில் என்ன பார்க்கும்போது எனக்கே அழகா தெரியுது. அதற்கு ஒளிப்பதிவாளருக்கு நன்றி. இயக்குனர் இந்த படத்தோட கதையின் ஒவ்வொரு லைனையும் மைண்ட்லயே வச்சிருப்பாரு. குரு சோமசுந்தரம் நடிக்கிற எல்லாத்தையும் ரசிக்கலாம். அனுமோல் அவர்களுடைய கண்ணு அப்படியே நடிக்கும். கே உங்களுடைய மியூசிக் ரொம்ப அழகா இருக்கு. இது ரொம்ப அழகான கதை. இந்த சமுதாயத்திற்கு தேவையான படம்” என்றார்.

படத்தில் நடித்த நடிகர் மற்றும் ப்ரொடியூசர் கணேஷ் பேசும்போது, “என்னுடைய போட்டோ பார்த்து தேர்ந்தெடுத்தேன்னு சொன்னாரு. எனக்கு இந்த கதை ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருந்துச்சு. இந்த டீமே ஒரு பாசிட்டிவான எனர்ஜி. ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு மீனிங் இருக்கும் இந்தப் படத்தில் நடிச்சது சந்தோஷமா இருக்கு” என்றார்.

படத்தில் நடித்த நடிகை அனுமோல் பேசும்போது,
“இந்தப் படம் எனக்கு ரொம்ப முக்கியமான படம். நான் சமுதாயத்திற்கு தேவையான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குனர் கூட பேசும் போது ஒரு கான்ஃபிடன்ட் இருந்துச்சு அதனால தான் இந்த படம் நான் நடித்தேன். இசையமைப்பாளர் கே போடுற தமிழ் பாட்டை விட மலையாள பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். குரு சோமசுந்தரம் கூட நடித்தது சந்தோஷமா இருந்துச்சு. எனக்கு அவரு மேல கோபம் .நான் அழகா இல்ல. என்ன விட வேற ஒரு ஹீரோயின் அழகா இருக்
காங்கன்னு என்கிட்டயே சொல்றாரு. இப்ப கூட அவர் கிட்ட சண்டை போட்டேன், ஆனால் அந்த சண்டை அன்பான சண்டை தான், இவர் மேல எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட் இருக்கு. எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் பழகுவார் . இந்தப் படத்துல நடிச்சது சந்தோஷமா இருக்கு இயக்குனர் தயாரிப்பாளர் எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இது ஒரு சின்ன படம் இல்லை ரொம்ப முக்கியமான படம்” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் கே பேசும்போது, “இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நான் நல்ல படம் தேடிக்கிட்டு இருந்த டைம்ல இந்த படம் எனக்கு வந்துச்சு. படத்துல ஒவ்
வொண்ணும் பார்த்து பார்த்து பண்ணி இருக்கோம். என்னோட இந்த படத்துல பாடல் பாடிய எல்லாருக்கும் என்னுடைய நன்றி என்னுடைய டீமுக்கும் என்னுடைய நன்றி”
என்றார்.

படத்தில் நடித்த நடிகர் குரு சோமசுந்தரம் பேசும்போது, “இந்தப் படத்துல நடிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். டைரக்டர் சொன்னதுமே எனக்கு ரொம்ப பிடிச்சு தான் ஒத்துக்கிட்டேன். நிறைய புது பட இயக்குனரின் மனைவி வேலைக்கு போவாங்க. ஆனா இந்த படத்தோட இயக்குனரின் மனைவி இந்த படத்துக்கு ப்ரடியூசர் ஆயிட்டாங்க. அது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் படம் கன்டென்ட் ஓரியண்டட் படம். அனுமோல் கிட்ட இன்னொரு நடிகை அழகா இருக்காங்கன்னு சொன்னதும் கடுப்பாயிட்டாங்க. அது அன்பான சண்டை. இந்த பட எடிட்டருக்கு நன்றி. இசையமைப்பாளர் கே உங்களுக்கு என்னுடைய நன்றி. முக்கியமா இந்த படத்தோட அசிஸ்டன்ட் டைரக்டர் விக்கி இந்த படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு எனக்கு போட்டியா இருக்கிற மாதிரி நடிக்கிறார். ரொம்ப கஷ்டமான ரோல். அத ரொம்ப நல்லா பண்ணி இருக்கிற அவருக்கு வாழ்த்துக்கள். பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பா வளராது. நாம மாறினால் தான் எல்லாமே மாறும். இந்த படம் அதைப்பற்றி தான் பேசுகிறது. எல்லோருக்கும் ரொம்ப நன்றி” என்றார்.

சிறப்பு விருந்தினர் கௌசல்யா சங்கர் பேசும்போது, “இந்தப் படத்துல சிறப்பு விருந்தினரா என்னை ஏன் கூப்பிட்டாங்கன்னு சந்தேகம் இருந்தது. ஏன்னா களத்துல வேலை செய்யறது தான் என்னுடைய வேலை. சினிமா எனக்கு தெரியாது ஆனால் இந்த படம் பார்த்ததும் இது சமூகத்திற்கு ரொம்ப தேவையான படம். இந்த படத்தில் காதல் ரொம்ப இயல்பாக இருந்தது. ஒரு பெண் இந்த சமூகத்தில் எப்படி இருக்கணும் என்பதையும் இந்த படம் தெளிவா காட்டியது. தமிழ்நாட்டுல இப்பவும் பெண்களின் உரிமைக்காகவும் எல்லோருடைய உரிமைக்காகவும் நிறைய பேரு போராடுறாங்க அதனுடைய தொடர்ச்சி தான் இந்த படம். ஒரு பெண் மாறினால் அந்த சமூகம் மாறும். எல்லோரும் மாறும்போது இந்த சமூகம் ஜாதியை கடந்து நிற்கும் அப்படின்றத இந்த படம் காட்டிச்சு. ஒரு பெண் தன்னுடைய இணையை எதை வைத்து தேர்ந்தெடுப்பது என்று தவறாக இருக்கும் பிற்போக்குத்
தனத்தை இந்த படம் உடைத்திருக்கிறது. ஆணவ படுகொலைகள் தொடர்ச்சியா தமிழ்நாட்டுல நடந்துக் கிட்டு இருக்கு. அதை பண்றது பெற்றோர்களாக இருக்காங்க. அதற்கு ஒரு மாற்றமா இந்த படம் இருக்கு. ஆணவ படுகொலைக்கு எதிரா தனிச்சட்டம் வேணும்னு அரசு கிட்ட கேட்டு இருக்கோம். அதற்கு இந்த படம் வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். குரு சோமசுந்தரம் ஒரு கதாபாத்திரமா நடிக்காமல் கதாபாத்திரமாக வாழ்கிறார்” என்றார்.

படத்தின் இயக்குனர் சராஜ் சீலன் பேசும்போது, “என்னுடைய சினிமா வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பித்தது, என்னுடைய அப்பா தான் எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தார், வாரம் தவறாமல் அப்பா தியேட்டருக்கு அழைச்சிட்டு போவார்
படங்களை பார்ப்போம், படிச்ச ஸ்கூல் வாசல்ல ஐந்து தியேட்டர் இருக்கும். வகுப்பறையில் ரஜினி கமல் பற்றிதான் அதிகமா பேசுவோம் சினிமா தான் எங்களுடைய பேச்சு. பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாக்யராஜ் இவங்க தான் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர்கள். நான் பாக்யராஜ் சாரை இந்த படத்துக்கு கூப்பிட ணும்னு நினைத்திருந்தேன்.
அவரு இப்ப இல்ல. அது ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்க அப்பாவுக்கு கலைத்துறையில் ரொம்ப ஆர்வம். அவர்மூலமா தான் நான் எல்லாமே கத்துக்கிட்டேன். நான் சினிமாவை படித்து தான் கத்துக்கிட்டேன். ஒரு நிமிட ஷார்ட் பிலிம் என்னோட பொண்ணை வைத்து எடுத்தேன் அந்தப்படம் செலக்ட் ஆனதும் என்னுடைய பார்வை ரொம்பவும் பெரிதா மாறியது அதற்குப் பிறகு எல்லாமே சினிமா தான் என்று முடிவு செய்தேன். குரு சோமசுந்தரம் கிட்ட முதல் முறை கதை சொன்னதும், ‘ரொம்ப நல்லா இருக்கு. நானே பண்றேன்’என்று சொல்லிட்டார். அவர் கூட பயணித்தது எனக்கு சந்தோசமா இருக்கு. ரொம்ப நன்றி குரு சார். அனுமோல் கிட்ட போன்ல தான் கதை சொன்னேன் அவருக்கும் பிடித்து ஒத்துக்கிட்டாங்க அதற்கும் நன்றி. படத்துல நடிச்ச நடிகர் நடிகைகள் எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி. சாபு இந்த படத்துக்கு ஒரு முக்கியமான பில்லர். நான் சொன்னதை ரொம்ப அருமையா பண்ணி கொடுத்தார். கலை இயக்குனரின் உழைப்பு ரொம்ப முக்கியமானது அவருக்கும் என்னுடைய நன்றி. இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி என்றார்.

நடிகர்கள்
குரு சோமசுந்தரம்,
அனுமோல்,
அர்ச்சனா குமார்,
விஜய் விஷ்வா,
சாய் விக்கி,
நயனா சாய்.

தொழில்நுட்பக் குழு
எழுத்து & இயக்கம் – சராஜ் சீலன்
ஒளிப்பதிவு – சதீஷ் ஜி.
இசை – கே. கிருஷ்ணகுமார்
படத்தொகுப்பு – வி.ஜே. சபு ஜோசப்
கலை இயக்கம் – தாமு
பாடல்கள் – விவேக், யுகி பிரவீன், சராஜ் சீலன்
நடன அமைப்பு – ஸ்ரீ கிருஷ், பிரசாந்த்
மேக்கப் – கார்த்திக் குமார் மற்றும் குழுவினர்
ஆடை வடிவமைப்பு – கே. பராஹுல்
தயாரிப்பு வடிவமைப்பு – லட்சுமி கிருஷ்ணலட்சுமி & சுப்ரியா டெசிரா
ஸ்டில்ஸ் – சிவா
ஒலி வடிவமைப்பு – ஹரி ஹரன்
ஒலிக் கலவை – சிவ் டெக் மெடி
லைன் புரொட்யூசர் – பாலிக் பார்ட்னர்ஸ் ஸ்டுடியோ
எக்ஸிக்யூட்டிவ் மேனேஜர் – மனோபாலா கண்ணன்
பி.ஆர்.ஓ – ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்
பப்ளிசிட்டி டிசைனர் – வி.எம். சிவகுமார்
இணை இயக்குநர் – ஸ்வானி ராஜலிங்கம்
இணை இயக்குநர்கள் – என். சபீர், விக்னேஷ் விஜய ராஜ்
எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் – பி. சூர்ய பிரகாஷ்
கிரியேட்டிவ் புரொட்யூசர் – எழில் சத்யா
இணை தயாரிப்பாளர் – வெங்கல் எம். லிங்கேஸ்வரன்
தயாரிப்பாளர் – கண்மணி ரங்கநாதன்.
விரைவில் திரைக்கு வரவிருக்கிறது, பாரிஸ் கபே.

Comments (0)
Add Comment