அதை ஒரு அழகான கால்பந்து கிராமம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த கிராமத்தின் அத்தனை பேரும் கால்பந்தாட்டத்துக்கு தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். பரிசுகளை எப்படின்னா சிறு சுங்க எப்படி இருக்கும்? ஒரு ஏழு இளசுகள் கால்பந்து விளையாடி தங்கள் திறமையை மேம்படுத்த விரும்புகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு மைதானம் கிடைப்பது பிரச்சினை ஆகிறது. அந்த ஊரின் கால்பந்தாட்ட வீரரான ஆண்டனி வர்க்கீஸ் மற்றும் அவரது நண்பர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் பயிற்சி எடுப்பதற்கான மைதானம் கிடைப்பதோடு, தங்கள் அணிக்கு 7 ஸ்டார் என்ற பெயர் சூட்டி விளையாடத் தொடங்குகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் ஐ.எஸ்.எல். கால் பந்தாட்ட அணியான கேரளா பிளாஸ்டர் கால்பந்தாட்ட போட்டி ஒன்றை நடத்துகிறது. அதில், 7 ஸ்டார் அணியை பங்கேற்க வைத்து, அதன் மூலம் அவர்களது விளையாட்டு திறனை ஊரறிய வேண்டும், என்று விரும்பும் ஆண்டனி வர்க்கீஸ், அதற்காக இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஐ.எம்.விஜயனிடம் உதவி கேட்கிறார். அவர் சிறுவர்களிடம் இருக்கும் கால்பந்தாட்ட ஆர்வம் பார்த்து, அவர்களுக்கு பயிற்சியளிக்க சம்மதிக்கிறார். போட்டிக்காக அவர்களை தயார் செய்கிறார்.
7 ஸ்டார் அணி, கால் பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று தங்களை நிரூபிக்க களம் இறங்குகிறது. இதில் அவர்கள் வென்றார்களா என்பது கால்பந்து ஆட்டத்துக்கே உரிய வேகத்துடன் கூடிய திரைக்கதை.
இந்தக் கதைக்குள் ஆண்டனி வர்கீஸ் தொடர்பான உப்பு சப்பு இல்லாத ஒரு காதல் கதையையும் இணைத்திருக்கிறார்கள்.
கதையின் மையமே அந்த ஏழு சிறுவர்கள் தான். ஒவ்வொருவரிடமும் ஒரு வித குணாதிசயம், அதுவும் ரசிக்கும்படி.
கேப்டன் குஞ்சுமணி, மிகப் பொருத்தமான தேர்வு.
படத்தில் இன்னொரு நாயகனாகவே நம் மனதில் பதிந்து போகிறவர் சிறுவன் உமர். அவனது ஒவ்வொரு முக பாவனைகளும் அந்த கேரக்டருக்கு மகுடமாக அமைந்து விடுகின்றன. அணியில் சேர்க்காமல் ஒதுக்கப்படும் போது ஒரு இதமான சோகத்தை அவன் பிரதிபலிப்பது தனி அழகு. ஆட்டத்தில் அசத்தும்போது அந்த அசால்ட்டான ரியாக்ஷனில் நம் மனதுக்குள்ளும் சுலபத்தில் குடியேறி விடுகிறான்.
பர்ஹான் கதாபாத்திரத்தில் வரும் சிறுவன் பாசித் திரைக்கு கிடைத்த இன்னொரு நடிப்பு வெளிச்சம்.
முதல் பாதியில் சுட்டித்தனத்தோடு பயணிக்கும் இந்த சிறுவர்கள் இரண்டாம் பாதியில் கால்பந்தாட்ட மைதானத்தில் ஆக்ரோஷ வீரர்களாக மாறி நம்மையும் கால்பந்து விளையாட்டு அரங்குக்குள் தள்ளிக் கொண்டு போய் விடுகிறார்கள்.
கால்பந்து நட்சத்திரம் ஐ.எம்.விஜயனாகவே நடித்திருக்கும் கால்பந்தாட்ட வீரர் ஐ.எம்.விஜயன், இந்த கதைக்கு இன்னொரு பிளஸ் ஆக அமைந்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஃபைஸ் சித்திக், எளிமையான கிராமத்தின் அழகை தனது கேமராவில் அள்ளித் தந்ததோடு, கால்பந்தாட்ட போட்டியை பெரிய மேட்ச் லெவலுக்கு உண்மையா இணையாக காட்சிப் படுத்தி ரசிக்க வைக்கிறார்.
ஜேக்ஸ் பீஜாயின் இசையில் பாடல்கள் ரசனையின் விலாசம் தர, பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் பலம்.
எழுதி இயக்கியிருக்கும் நிகில் பிரேம்ராஜ், கேரள கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்டத்தின் மீதான அவர்களது அதீத ஆர்வத்தையம் வெள்ளித்திரையில் பிரகாசிக்க வைத்திருக்கிறார்.
விளையாட்டுத்தனமிக்க முதல் பாதி படத்தின் ஜாலிக்கு கியாரண்டி தர, மறு பாதியோ கால் பந்து கிரவுண்டாகவே மாறிப் போகிறது. தொடக்கத்தில் இடம் பெறும் ராவுத்தர் தொடர்பான பில்டப் காட்சிகள் மட்டும் இந்த கதைக்கான ஸ்பீடு பிரேக்.
பிளஸ்: ஆட்டநாயகன் விருது பெறும் உமர்.
பிளாஷ்: கால்பந்து விளையாட்டின்
சூட்சுமத்தை நடிப்புக்கா என்று தள்ளிவிடாமல் நிச்சயமாகவே சிறுசுகளுக்கு களத்தில் இறங்கி கற்றுத் தர முன் வந்த கால்பந்து நட்சத்திரம் ஐ எம் விஜயன்.
ரேட்டிங்: 5/10.