பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் விற்பனையாளர் பணியில் சேரும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு பேரும் நண்பர்களாகிறார்கள். நால்வரும் தங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களது நிறுவனம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்காததால், உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.
இதற்கிடையே, தொழிலதிபர் ஒருவரது மகன் கடத்தப்பட, அந்த கடத்தல் குற்றத்தின் பின்னணியில் இந்த நான்கு நண்பர்கள் இருப்பதாக காவல்துறை அறிவிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த காவல்துறையும் இவர்களை தேடுகிறது.
தங்கள் மீது விழுந்த பழியை போக்கி, கடத்தப்பட்ட சிறுவனையும் கண்டுபிடிக்க முடிவு செய்யும் நண்பர்கள், அதில் வெற்றி பெற்றார்களா ? என்பதை காமெடி பின்னணியில் சொல்வதே இந்த கோல்டு கால்.
கதையின் நாயகர்களாக வரும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகியோர் தமிழுக்கு புதியவர்கள் என்றாலும் தங்கள் கேரக்டர்களை அவர்கள் கையாண்டிருக்கும் விதத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாயகிகளாக நடித்திருக்கும் அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேலி லிட்டி, hb கீர்த்தனா புல்கி ஆகியோரும் கதைக்களத்தில் இயல்பாக வந்து மனதில் தடம் பதிக்கிறார்கள்.
சரவணனின் ஒளிப்பதிவு கதைக் களத்தோடு இணைந்து சிறப்பு சேர்க்கிறது.
பிரணவ் கிரிதரனின் இசையில் பாடல்கள் அத்தனையும் ரசிக்க வைக்கும் ரகம். அளவான பின்னணி இசையிலும் காட்சிகளை அழகு படுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை, விற்பனையாளர்கள் பணி மற்ற பணிகளை போல் அத்தனை சுலபமானது அல்ல என்பதை கோடிட்டு காட்டுவதோடு, அவர்களது வாழ்வில் நடக்கும் எளிய சம்பவங்களை சுவாரசியம் கலந்து சொல்லி காட்சிகளுடன் ரசிகர்களை இணைத்துக் கொள்கிறார்.
பிளஸ்: சரளமாக கதை சொல்லும் இயக்குனரின் ஆற்றல்.
பிளாஷ்: துடிப்பான இளைஞர்கள் கூட்டணி.
ரேட்டிங்: 5.8/10.