காதல் வசப்படும் ஒரு பாடகனுக்கு தனது கேரியர் முக்கியமா? காதல் முக்கியமா? என்ற கேள்வியை எழுப்பிய படம் மீசைய முறுக்கு. 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்து காதலும் இசையுமாய் ரசிகர்கள் மனதை நிரப்பிய அந்தப் படம் என்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு உரியது.
இப்போது இரண்டாம் பாகத்துக்கு வருவோம் கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, தன் கனவுக் கலையை குறுகிய வட்டத்திற்குள் இருந்து எல்லாருக்கு மாய் எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார். அவரது உன்னதமான இந்த நோக்கம் நிறைவேறியதா?
மற்ற இசைக் கலைஞர்களுக்கு எளிதில் கிடைக்கும் வாய்ப்பு, கானா பாடகர்களுக்கு சற்று எட்டத்திலேயே இருந்து விடுகிறது. அவரால் முடியாததை செய்து முடிக்க மகன் முனைகிறான். ஆனால், அவரது வாழ்க்கை சூழ்நிலை அவரது கானா கனவை காணாதே ஆக்கி விட .. மூன்றாவது தலைமுறையிலும் அத்தகைய ஒரு போராட்டத்தை எதிர்கொள்ளும் ஹிப் ஹாப் ஆதி, தனது தாத்தா மற்றும் அப்பா போல் தோல்வி அடைந்தாரா ? அல்லது இசைத்துறையில் சாதித்தாரா? என்பதை நெஞ்சம் நிறைய இசை நிரப்பி தந்திருக்கிறார்கள்
நாயகனாக வரும் ஹிப்ஹாப் ஆதி ஆட்டம், பாட்டம் என்று படம் முழுக்க கொண்டாட்ட மனநிலையோடு வருகிறார். அப்படியே கானாவுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தருவதற்
கான புரட்சியையும் செய்து இசை ரசிகர்கள் மனதுக்குள் இடப்பெயர்ச்சி செய்து விடுகிறார்.
சைத்ரா ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என கதையின் மூன்று காலகட்டத்துக்கும் மூன்று நாயகிகள். குறை இல்லாத நடிப்பு இவர்களுடையது.
ஆதியின் நண்பராக நடித்திருக்கும் ஹர்சத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியத்தின் கேமரா, கதை கதை நிகழும் மூன்று கால கட்டங்களின் வேறுபாடுகளையும் துல்லியமாக படம் பிடித்து காட்டி இருக்கிறது.
எழுதி இயக்கி இசையமைத்திருக்
கும் ஹிப்ஹாப் ஆதி, முதல் பாகத்தின் அதே மையக்கருவை ஒரு கையிலும், மறு கையில் சென்னை கானா கலைஞர் ளுக்கான அங்கீகாரம் என்ற பதாகையை இன்னொரு கையிலுமாக ஏந்தி ஜென்சி தலைமுறை ரசிகர்களிடம் கூடு விட்டுக் கூடு பாய்ந்து இருக்கிறார்.
வசந்த கீதம் ஒரு பசலைக்கு பஞ்சம் இல்லாத ஒரு படத்தை தந்த வகையில் மறுபடியும் மீசையை சந்தோஷமாய்
முறுக்கிக் கொள்ளலாம்.
பிளஸ்: கானா பாடல்கள் காதுக்குள் ஒருமித்து சங்கமம்.
பிளாஷ் இசைக்குப் போக, கொஞ்சம் கதை.
ரேட்டிங்: 6.5/10.