தனுஷ் பட விழாவில் நடிகைக்கு நேர்ந்த கதி

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகி. முக்கிய கேரக்டர்களில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஐஸ்வர்யா இருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், வருகிற 12-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின்ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியைசென்னை நேரு ஸ்டேடியத்தில் படக்குழு நடத்தியது. இதில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நள்ளிரவு வரை நீடித்த இந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் கூட்டத்தில் ஒரு நபர் இப்படத்தில் நடித்த ஐஷ்வர்யாவிடம் அத்து மீறியதாக கூறப்படுகிறது. அதனால் ஆவேசம் கொண்ட ஐஷ்வர்யா, அந்த நபரை தாக்கி காலில் விழவைத்தார். தாக்கியுள்ளார். இதனை வீடியோ எடுத்ததை தொடர்ந்து, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக ஐஷ்வர்யா கூறுகையில், ‘‘அந்தக் கூட்டத்தில், ஒரு பையன் என்னிடம் அத்துமீறினான். அந்த துணிச்சல் அவனுக்கு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே நான் கூச்சலிட்டு அவனை தாக்க தொடங்கினேன். என்னைச் சுற்றி நல்ல, அன்பான மற்றும் மரியாதைக்குரிய மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற சில மனிதர்கள் சுற்றி இருப்பது மிகவும் பயம் தருகிறது”என்றார்.

ஐஷ்வர்யா, தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் நடித்த ‘சரக்கு’ பட ஆடியோ விழாவில் ஐஷ்வர்யா தான் நிகழ்ச்சி தொகுப்பாளர். இந்த மேடையில் திடீரென நடிகர் கூல் சுரேஷ் ஐஷ்வர்யாவுக்கு மாலை அணிவித்து பரபரப்பாக்கினார். அப்போது இது சர்ச்சையானது. இப்போது அடுத்தசர்ச்சை.

Comments (0)
Add Comment