கமல் படத்தில் சிம்பு

நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு. படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகவே, இதையடுத்து, ஒரு கேரக்டரில் சிம்பு நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

Comments (0)
Add Comment