நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படப்பிடிப்பு நிறைவு

ட்யூட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மண்ணாங்கட்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

‘அன்னபூரணி’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மண்ணாங்கட்டி. சின்ஸ் 1960’. ‘ப்ளாக் ஷீப்’ யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நயன்தாரா தவிர, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் ஏனைய நட்சத்திரங்கள்.

ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு. ஜி மதன் படத்தொகுப்பு.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Comments (0)
Add Comment