வித்தியாசமான திரில்லர் கதையில் உருவாகும் ‘குற்றம் புதிது’

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘குற்றம் புதிது.’

அறிமுக இயக்குநர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் நாயகனாக தருண் நடிக்கிறார். நாயகியாக செஷ்வித்தா நடிக்கிறார்.

மற்றும் மதுசூதன் ராவ், ராமச்சந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா,ஸ்ரீகாந்த்,மீரா ராஜ்,டார்லிங் நிவேதா ஏனைய பிரதான நட்சத்திரங்கள்.
இவர்களின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும்.

இந்த படம் “கற்பனைக்கு அப்பாற்பட்டதை யதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது.
இமாதம் 23-ம் தேதி தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

Comments (0)
Add Comment