ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்துக்கு நடிகர் ரஜினி தயாராகிறார்.
‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் கமிட் ஆனார் நடிகர் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பெரிய நட்சத்திரக்கூட்டமே உண்டு. அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ரஜினி நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.