இங்க நான் தான் கிங்கு திரை விமர்சனம்

சொந்த வீடு இருந்தால் தான் பெண் தருவார்கள் என்று நினைத்து, ரூ.25 லட்சம் நண்பனிடம் கடன் வாங்கி ஒரு வீடு வாங்குகிறார், சந்தானம்.. அப்படியும் அவருக்கு பெண் கிடைக்காததால், திருமண தகவல் மையத்தில் வேலைக்கு சேர்ந்து பெண் தேடுகிறார். இதில அவரது ஒரே லட்சியம், பெண் வீட்டாரிடம் நடப்பை சொல்லி வரதட்சணையாக 25 லட்சம் வாங்கி கடனை அடைத்து விட வேண்டும் என்பது தான்.
இதற்கிடையே கல்யாண புரோக்கர் மூலம் ஜமீன் குடும்பம் ஒன்று சந்தானத்திற்கு பெண் கொடுக்க முன்வருகிறது. ஜமீன் என்பதால் தனது கடனான ரூ.25 லட்சம் தனக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், ஜமீனின் மகளை மணக்கிறார். தாலி கட்டிய பிறகு தான் தெரிகிறது, அது கடன்பட்ட ஜமீன் குடும்பம் என்று.
கடனுக்காக ஜமீன் பங்களா ஜப்திக்குப்போக, இப்போது சந்தானத்தின்நிலை இன்னும் பரிதாபம். மனைவியுடன் மாமனார், மச்சினருக்கும் சேர்த்து சோறு போட வேண்டும். இதில் கடனை எங்கே அடைப்பது?

இந்த நிலையில், வெடிகுண்டு வைப்பதற்காக தீவிரவாத கும்பல் ஒன்று சென்னைக்குள் நுழைகிறது. அவர்கள் மூலம் சந்தானத்திற்கு ரூ.50 லட்சம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அமைய, அந்த மேஜிக் எப்டி நிகழ்ந்தது என்பதை சிரிக்கவும் ரசிக்கவுமாய் தந்திருக்கிறார்கள்.
நாயகனாக சந்தானம் நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் ஒருகை பார்த்திருக்கிறார். அதிரடியிலும் அட்டகாசம். ஜமீன் குடும்பத்தில் ஏமாந்ததும் அவர் காட்டும் ரியாக்‌ஷன்கள் ‘அடடா, அழகு’ ரகம்.

நாயகியாக நடித்திருக்கும் பிரியலயாவுக்கு வழக்கமான கமர்ஷியல் நாயகி வேடம் என்றாலும் நடி நடனம் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார்.

ஜமீனாக வரும் தம்பி ராமையா படத்தின் கலகலப்புக்கு இன்னொரு தூணாகி நிற்கிறார்.

பாலசரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த் ஆகியோருடன் மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ் கூட்டணியும் சிரிப்ஸ்க்கு உத்தரவாதம்.

டி.இமானின் இசையில் ‘மாயோனே’ தேனின் தித்திப்பு.
முதல்பாதி கலகலப்பு மறுபாதி தீவிரவாதிகளுடன் கைகலப்பு என பொழுதை பழுதில்லாமல் கொண்டு சென்ற விதத்தில் இயக்கிய ஆனந்த் நாராயண் கவனிக்க வைக்கிறார்.
காமெடி கிங்.

Comments (0)
Add Comment