27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா-கஜோல்

1997-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் பிரபுதேவாவும் – கஜோலும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இருவரின் நடிப்பில் உருவான ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் இன்றளவும் ரசிகர்களின் கொண்டாட்டப் பாடல்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட் படம் ஒன்றுக்காக இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ‘மஹாராக்னி’ (Maharagni) என தலைப்பிடப்பட்டுள்ளது. சரந்தேஜ் உப்பளபதி இயக்குகிறார். தெலுங்கு இயக்குநரான இவர் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில், பிரபுதேவா, கஜோல் தவிர்த்து, நசீருதின் ஷா, சம்யுக்தா, ஜிஷு சென் குப்தா, ஆதித்ய சீல், சாயா கதம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். பிரபுதேவாவின் ஆட்டமும் கஜோலின் அதிரடியும் படத்தின் ஸ்பெஷல் என்கிறார்கள்.

Comments (0)
Add Comment