நடிகர் அர்ஜூன் கதையில் 13 மொழிகளில் வெளியாகும் படம்

நடிகர் அர்ஜூன் கதையில், இயக்குநர் ஏ.பி.அர்ஜூன் இயக்கத்தில், துருவா சர்ஜா நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் மார்டின்.

துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வாசவி எண்டர்பிரைசர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் கே.மேத்தா,சுராஜ் உதய் மேத்தா தயாரித்துள்ள இந்த படம், அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர்.

இதன் முதல் கட்டமாக படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் நடிகர் அர்ஜூன் பேசியதாவது……


என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. நான் துருவாவின் மாமா ஆனால் அவனை நான் என் மகனாகத் தான் நினைக்கிறேன். துருவாவின் ஐந்தாவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது.அவனுக்கென பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன்.உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ, இந்தப்படத்திற்கு அப்படி செலவு செய்துள்ளார்.100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள்.13 மொழிகளில் இப்படம் ரெடியாகி இருக்கிறது.உலகம் முழுக்க யார் பார்த்தாலும்,இந்தப் படம் பிடிக்கும்.ஆக்சன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது.வித்தியாசமான திரைக்கதை.நிறைய ஃபாரின் ஆர்டிஸ்ட் நடித்துள்ளார்கள்,துருவாவிற்கு இந்தப்படம் பெரிய பிளாக்பஸ்டர் ஆக இருக்கும்.அனைவருக்கும் என் வாழ்த்துகள், நன்றி என்றார்.

நடிகர் துருவா சர்ஜா பேசியதாவது…..


தமிழில் எனக்கு ரெண்டாவது படம்,செம்ம திமிரு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மார்டின் படத்திற்கும் நல்ல ஆதரவைத் தாருங்கள். இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் என் நன்றி. என் காட்ஃபாதர்,எனக்காக எல்லாம் செய்யும் அர்ஜூன் சாருக்கு நன்றிகள்.இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் படமாக,புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம்.உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.

Comments (0)
Add Comment