செப்டம்பர் 20 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகும் “தலைவெட்டியான் பாளையம்”

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம், எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி நியாதி, ஆனந்த் மற்றும் பால்ராஜ் ஆகியோர் பிரதான நட்சத்திரங்கள்.

பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடரை தி வைரல் ஃபீவர் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

தலைவெட்டியான் பாளையம் இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 அன்று ஆங்கில சப் டைட்டில்களுடன் தமிழில் பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மீண்டும் உயிர்பெற்று எழச்செய்து அதன் ஒரு கண்ணோட்டத்தை மனதைக் கவரும் வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்த தலைவெட்டியான்பாளையம் எனும் இணையத் தொடர் பிரைம் உறுப்பினர் பட்டியலில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு ₹1499 மட்டும் செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம்

தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்) வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர் தொடங்குகிறது வித்தியாசமான கிராமப்புற வாழ்க்கை மற்றும் கிராமவாசிகளின் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறார். இதனால் ஏற்படும சுவாரசியமான திடீர் திருப்பங்களை கதையின் நகைச்சுவையான சூழல் விவரிக்கிறது.

மனதைக் கொள்ளை கொள்ளும் கதையின் வழியாக நம் முன்னே காட்சிப்படுத்தி நம்மைக் கவர்ந்திழுத்து கட்டிப்போட்டு விடுகிறது. அதிகாரபூர்வமான கிராமப்புற வசீகரம் மற்றும் உலகளாவிய சமூக இயக்கவியலின் கருப்பொருள் அதன், விதிவிலக்கான பல்திறன் வாய்ந்த நடிகர்கள் குழுவால், உயிர்ப்பிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தொடர் பார்வையாளர்களைக் பெருமளவில் கவரும் என்பது உறுதி” என்கிறார், பிரைம் வீடியோ இந்தியா, கன்டெண்ட் லைசென்சிங் டைரக்டர் மனிஷ் மெங்கானி.

Comments (0)
Add Comment