-அர்ஜுன் தாஸ் நடிப்பில் அடுத்த கட்டம் ‘, பாம்’

-அர்ஜுன் தாஸ் நடிப்பில்
அடுத்த கட்டம் ‘, பாம்

கைதி படத்தில் வில்லனாக திரை முகம் காட்டினார் அர்ஜுன் தாஸ். அப்போதே ரசிகர்கள் தங்கள் இதயச் சிறைகளில் கைதியாக வைத்துக் கொண்டார்கள். கைதியில் அவர் ஏற்றிருந்த வில்லன் கேரக்டருக்கு அந்த அளவுக்கு தனது நடிப்பால் சிறப்பு சேர்த்து இருந்தார்.
தொடர்ந்து மாஸ்டர், அநீதி என படத்துக்கு படம் வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களின் ஃபேவரைட் ஆன அர்ஜுன் தாஸ், இப்போது பாம் படத்தில் கிராமத்து நாயகனாக முற்றிலும் புதுவித நடிப்பை தந்து இருக்கிறார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப் புகழ் விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
காளக்கம்மாய்ப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு காலத்தில்
மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ் கிறார்கள். மலை
உச்சியில் மயில் அகவும் ஓசையும் அதைத்தொடர்ந்து வானில் தெரியும் ஜோதியும் அவர்கள் தெய்வ நம்பிக்கையாக இருக்கிறது.
இப்படிப்பட்ட ஊர் ஒரு கட்டத்தில் தெய்வ தரிசனம் இன்றி மழையும் இன்றிப் போனதில் ஊர் இரண்டாக பிரிகிறது.
இந்த சூழலில் அங்கே வாழும் கதிர் என்ற இளைஞன் (காளிவெங்கட்) இரு கூட்டத்தையும் ஒன்று சேர்க்க முயற்சி செய்கிறார். ஆனால் அப்படி எதுவும் அதிசயம் நடந்து விடவில்லை. ஒரு நாள் குடித்துவிட்டு வீடு வந்த நிலையில் கதிர் உயிரை விட்டு விடுகிறார்.
அதிர்ச்சியில் உறைகிறது கிராமம். இருந்தாலும் அவர் உடலில் இருந்து இயற்கை வாயு அதாவது குசு அவ்வப்போது வெடியோசை போல் வந்து கொண்டிருக்கிறது. அப்போது அவர் தலை மட்டும் சிலிர்த்து கொள்கிறது. இதனால் அவர் இறக்கவில்லை என்று அவரது நண்பர் மணிமுத்து (அர்ஜுன் தாஸ்) நம்புகிறார். இரண்டு ஊருக்கும் மத்தியில் உள்ள ஆலமரத்தடியில் காளி வெங்கட்டை ஒரு நாற்காலியில் அமர்த்தி வைக்கிறார் அர்ஜுன் தாஸ். வாயு வெளியேறும் போது காளி வெங்கட் உடல் அதிர்கிறது. இதைப் பார்த்த அந்த ஊர் பூசாரி ஊருக்கு சாமி வந்திருப்பதாகக் கூறுகிறார். இதனால் தங்கள் வேற்றுமைகளை மறந்து சாமியாக கதிரை அந்த ஊர் நினைக்கிறது.
அதற்குப் பிறகு அந்த ஊரில் பல அதிசய சம்பவம் நடக்க, அதை தங்கள் இஷ்ட தெய்வத்தின் கருணையாக இரு பிரிவினரும் நம்புகிறார்கள். இதன் மூலம் இரு பிரிவினரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகன் மணி முத்துவாக அர்ஜுன் தாஸ். இப்படி ஒரு கிராமத்து கதைக் கேற்ப மண் மணம் சார்ந்த அந்த பாத்திரத்தில் தன்னை மாற்றிக் கொண்டு தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார். கதிரின் மரணத்திற்குப் பிறகு பிற்பகுதி கதை முழுக்க அவரை சுற்றியே நகர்கிறது.
அவரும் அதை உணர்ந்து அந்த கேரக்டருக்குள் தன்னை முழுமையாக ஒப்படைத்து இருக்கிறார்.
சினிமாத்தனமும் ஹீரோயிசமும் இல்லாத அந்தப் பாத்திரத்தில் நடித்து ஒரு பண்பட்ட நடிகராக அந்த மணிமுத்து பாத்திரம் மூலம் நமக்குள்
சுலபத்தில் இடப்பெயர்ச்சி செய்து விடுகிறார். ஊரை திருத்த ஆவேசமாய் அவர் சாமியாடும் இ டத்தில் படத்தில் அப்படி ஒரு எனர்ஜி.
இந்த படத்தில் ஊர்க்காரர்கள் சிலரிடம் அறை கூட வாங்குகிறார். திருப்பி அடித்தால் ஊர் மேலும் பிளவு படும் என்று உணர்ந்து அமைதி காக்கிறார். ஊரின் ஒற்றுமையைக்
கெடுக்கத் திட்டமிடும் அரசியல்வாதிகளின் அடியாட்கள் தன்னை தாக்க வரும் போது மட்டும் வட்டியும் முதலுமாக போட்டு தாக்குகிறார். இந்த வகையில் அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் தந்திருப்பது முழுக்க முழுக்க கதைக்கான நாயகனை மட்டுமே.

Comments (0)
Add Comment