சரீரம் -திரை விமர்சனம்

கல்லூரியில் படிக்கும் நாயகன் தர்ஷன் பிரியனும், நாயகி சர்மி விஜயலட்சுமியும் காதலர்கள்.

இந்த காதலுக்கு நாயகி குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்புவது மட்டுமின்றி, ஒரு கட்டத்தில் நாயகனை போட்டுத் தள்ளவும் வும் முடிவு செய்கிறா ர்கள். அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்து வாழ வேண்டும் என்பதற்காக யாரும் யோசித்துக் கூட பார்க்க முடியாத ஒரு விசயத்தை காதலர்கள் செய்கிறார்கள். காதலன் பெண்ணாகவும் காதலி ஆணாகவும் உடல் மாற்றம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு அவர்களது காதல் வாழ்க்கை என்னவானது ? என்பதை வித்தியாசமான கதைக் களத்தில் தந்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன் பிரியன், நடனம், நடிப்பு, ஆக்‌ஷன் என எல்லா ஏரியாவிலும் தன் இருப்பை நிரூபிக்கிறார். காதலுக்காக எதையும் செய்யத் துணிந்தவர், தனது சரீரத்தையே மாற்றிக் கொள்ள சம்மதிக் கும் இடத்தில் உண்மைக் காதலை நடிப்பில் கொண்டு வந்து விடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் சர்மி விஜயலட்சுமி, தோற்ற மாற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாத நிலையில் தன்னைத் தேடி வந்த தந்தைக்கு ஹோட்டலில் பரிமாறும் இடத்தில் நடிப்பில் நெகிழ வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஜெ.மனோஜ், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ‘புதுப்பேட்டை’ சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜி.வி.பெருமாள் மலைச்சாமி என மற்ற வேடத்தில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்துகிறார்கள்.

படத்தில் ஆச்சரியப்படுத்தும் இன்னொருவர் டாக்டராக வரும் ஷகிலா. நடிப்பில் அத்தனை இயல்பு. இனி குணச்சித்திர பாத்திரங்கள் இவரை தேடி வரும்.

இசையமைப்பாளர் பாரதிராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு.

ஒளிப்பதிவாளர்கள் கே.டொர்னாலா பாஸ்கர்– பரணி குமார் ஆகியோரின் கேமராக்கள் மகாபலிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை அழகியலோடு காட்சிப்படுத்தி இருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் ஜி.வி.பெருமாள், இதுவரை யாரும் யோசித்துக் கூட பார்த்திராத ஒரு புதிய காதலை நெகிழ்ச்சிக்கு குறைவின்றி சொல்லி இருக்கிறார். காதலன் பெண்ணாகவும் காதலன் ஆணாகவும் பால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தொடங்கும் இடங்களில், நிஜமாகவே இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்தாலும், காதல் இதையும் செய்யும் என்று நம்ப வைக்கிற இடத்தில் தனது ஸ்டைலில் காதல் கொடியை பறக்க விட்டிருக்கிறார் இயக்குனர். படத்தில் திருநங்கைகளை பயன்படுத்தியவிதமும் சிறப்பு.

படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பாலின மாற்று ஆபரேஷன் விஷ யம் இயற்கைக்கு எதிரானது மட்டும் இன்றி விபரீதமானதும் கூட என்பதை நீதிபதி மூலம் சொல்லி படத்தை முடித்திருப்பது மேலும் சிறப்பு.
படத்தின் மையக்கரு காதலுக்கு பெருமை சேர்க்கிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு இயக்குனர் இந்த சரீரத்துக்கு ஆக்சிஜன் தந்திருக்கிறார்.

Comments (0)
Add Comment