பல்டி–திரை விமர்சனம்

கபடி விளையாட்டில் முன்னணி வீரர்களாக இருக்கும் நண்பர்கள் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு பண முதலைகளின் அடியாட்களாக மாறினால் என்னவாகும் என்பதை பல்டி அடிக்காமல் உண்மைக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.

நாயகன் ஷேன்நிகம் சாந்தனு உள்ளிட்ட நாலு நண்பர்கள் பஞ்சமி எனும் கபடிக்குழுவில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பொற்றாமரை அணியை செல்வராகவனும் ஷோ பாய்ஸ் டீம் அணியை அல்போன்ஸ் புத்திரனும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பஞ்சமி அணியில் இருக்கும் ஷேன் நிகம், சாந்தனு உள்ளிட்ட நண்பர்கள் குழுவை தங்கள் அணிக்காக விளையாட அழைக்கிறார்கள். இரு அணிகளில் ஓரணியில் தான் விளையாட முடியும் என்கிற சூழலில், அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு செல்வராகவனின் பொற்றாமரை அணியில் சேர்ந்து ஆடி அந்த அணிக்கு வெற்றி தேடித் தருகிறார்கள். இதன் பிறகு செல்வராகவனின் அடியாட்களாகவே
மாறிப் போகிறார்கள். ஒரு கட்டத்தில் செல் வராகவன் அவர்களுக்கு எதிரியாக மாறுகிறார். சாந்தனுவை ஆபத்து சூழ்கிறது. அதிலிருந்து அவரை மீட்க ஷேன்நிகம் களமிறங்குகிறார்.
விளைவு என்னவாகிறது என்பதை அடி தடி சகிதம் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ஷேன்நிகம், துடிப்பான விளையாட்டு வீரராக கவர்கிறார். விளையாட்டுக்களத்தில் இவர் டைவ் அ டிக்கும் ஸ்டைலே தனி. நண்பனுக்காக ‘செல்வராகவன்
அண்ட் & கோ’வை
துவம்சம் செய்யும் காட்சிகளில் ஆக்ஷனிலும்
அதகளம் செய்கிறார்.
சாந்தனுவுக்கு அவர் ஏற்றிருக்கும் இந்த கேரக்டர் நிச்சயம் அட்சய பாத்திரம். அள்ள அள்ள குறையாமல் நடிப்பு வந்து கொண்டே இருக்கிறது. நண்பனின் சந்தேகத்துக்கு ஆளாகும் இடத்தில் சாந்தனுவின் முக பாவங்கள் ஆசம்.

நாயகி பிரீத்தி அஸ்ரானிக்குக் காட்சிகள் குறைவு என்றாலும்,தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.கண்களால் இவர் காதல் பேசும் இடம் அத்தனை அழகு.

செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் ஆகிய இரு இயக்குநர்களும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர்.

அலெக்ஸ் ஜே.புலிக்கல் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் பரபரப்பு காட்சிகளிலும் எதிரொலிக்கிறது.

சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் ரசனைக் களஞ்சியம். பின்னணி இசையிலும் கவனம் பெறுகிறார்.

எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், விளையாட்டு வீரர்களாக இருக்கும் நண்பர்கள் அவர்களுக்கே தெரியாமல் தாதாக்கள் பிடியில் சிக்கி வன்முறைச் சூழலுக்கு இடம் மாறுவதை உணர்வுப் பூர்வமாக சொல்லி
இருக்கிறார்.
மொத்தத்தில் பல்டி விறுவிறுப்பான ஆட்ட களம்.

Comments (0)
Add Comment