சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்ற படம் ராமின் ‘பறந்து போ’

தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிஸியேஷன் பவுண்டேஷன் சார்பில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, hடிசம்பர் 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்று வந்தது.

இந்த திரைப்பட விழாவின் தமிழ் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் 12 திரைப்படங்கள் தேர்வாகியிருந்தது.

விருது வழங்கும் நிகழ்ச்சி திரைப்பட விழாவின் இறுதி நாளில் நடைபெற்றது.

ராமின் இயக்கத்தில் வெளிவந்த ‘பறந்து போ’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வுக்குழுவினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. விழாவில் இயக்குநர் ராம், டிஸ்னி + ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய் மற்றும் ஜி கே எஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் கருப்புசாமி ஆகியோருடன் விருதை பெற்றுக் கொண்டார்.

Comments (0)
Add Comment