வசூலில் அடித்து நொறுக்கும் சிரஞ்சீவி படம்

நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ தெலுங்கு படம் சமீபத்தில் வெளியான நிலையில் அதன் எகிறி அடிக்கும் வசூல் தெலுங்கு திரை வட்டாரத்தை ஆச்சரியத்தில்
ஆழ்த்தி உள்ளது.

நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து உருவான இந்த படம் ஜன.12ம் தேதி வெளியான நிலையில், இப்படம் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 5 நாளில் அதிகம் வசூலித்த முதல் திரைப்படமாக இது புதிய சாதனை படைத்துள்ளது.
வெளியான 5 நாட்களில் இப்படம் ரூ.226 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. 5-ம் நாளில் மட்டுமே ரூ.36 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள் ளது என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி நடித்து இதற்கு முன் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறிய நிலையில் இப்படத்தின் வெற்றி அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.

Comments (0)
Add Comment