இயக்குநர் – தயாரிப்பாளர் அட்லீ யின் மனைவி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார்.இதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அவர் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மீர் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக அட்லீ தம்பதிகள் பெற்றோராகி இருக்கிறார்கள்
இது தொடர்பாக பிரியா அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” எங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைகிறார். ஆம்! நான் மீண்டும் கருவுற்று இருக்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளையும், அன்பையும் எதிர்பார்க்கிறேன்” என பதிவிட்டு, பிரத்யேக புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த புகைப்படம்- அட்லீயின் விவரிக்க முடியாத தந்தையின் பாசத்தையும், நேசத்தையும் , புன்னகையுடன் வெளிப்படுவதுடன், தந்தையாக அவரின் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கிறது.
இதனிடையே திருமதி பிரியா அட்லீ & இயக்குநர் அட்லீ உரிமையாளராக இருக்கும் ‘பெங்களூரூ ஜவான்’ஸ்’ எனும் பிக்கிள்பால் அணி. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று மும்பையில் தொடங்கும் ‘வேர்ல்ட் பிக்ளிபால் லீக் ‘ போட்டி சீசன் 2 வில் விளையாடுகிறது என்பதும், தற்போது அட்லீ இயக்கத்தில் ‘ஐகான் ஸ்டார் ‘ அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.