மீண்டும் தயாரிப்பில் இறங்கிய லக்ஷ்மி மூவி மேக்கர்சின் முதல் படம் ‘4 இடியட்ஸ்’

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ், பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம். மூன்று முன்னணி தயாரிப்பாளர்கள் இதை நிர்வகித்து
வந்தனர்.
இந்நிலையில், அதன் நிறுவனர்களின் மறைவுக்குப் பிறகு அந்நிறுவனம் திரைப்பட தயாரிப்பை நிறுத்தி விட்டது.
இந்த நிலையில், லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனர்களின் வாரிசுகள் டாக்டர் எம் ஸ்ரீ வத்சன், எம் கோகுல் கிருஷ்ணன் தற்போது அதே நிறுவனத்தின் பெயரில் திரைப்படங்கள் தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
முதல் படமாக
4 இடியட்ஸ் என்ற படத்தை தயாரிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் நாயகனாக நடித்திருக்கிறார். வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மரியா நடித்திருக்கிறார். நாயகியாக பிரக்யா நயன் நடிக்க,
வின்சென்ட் அசோகன், கும்கி அஷ்வின், இந்திரன், திடியன் ஆகியோர் ஏனைய பிரதான நட்சத்திரங்கள்.
சுபாஷ் முனிரத்னம் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை கலைக் குமார், திவ்யபரத் ரவி எழுதியிருக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, எம்.டி.பிரபாகரன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். எஸ்.என்.பாசில் படத்தொகுப்பு செய்கிறார். டாவின்ஸி சரவணன் வசனம் எழுதியிருக்கிறார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில், சென்னை கமலா திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த இந்த நிறுவனம் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Comments (0)
Add Comment