சாத்தான்-தி டார்க் -திரை விமர்சனம்

கேரளாவில் எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் உள்ள மக்களிடம் சாத்தான் நம்பிக்கை அதிகம். அவர்கள் தங்கள் காரியத்தில் வெற்றி கிடைக்க சாத்தானுக்கு மனித உயிர்களைப் பலி கொடுக்கும் அளவுக்குத் துணிந்தவர்கள்.
அம்மக்கள் வசிக்கும் கிராமத்தில் பல்லாண்டு
களுக்குப் பிறகு மீண்டும் பல மர்ம மரணங்கள் தொடர்கின்றன.
அவற்றை விசாரிக்க காவல்துறை வருகிறது. அவர்களுடைய விசாரணையில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளியாகின்றன. பள்ளியில்
தன் மீது நட்பு பாராட்டும் சக மாணவி மீது உயிராக இருக்கிறான் நாயகன். அமானுஷ்ய சக்தியால் பாதிக்கப்படும் இந்த மாணவியின் தாயாரின் விபரீத நடவடிக்கைகள் ஊருக்குள் பிரச்சனை ஏற்படுத்த…
இந்த நேரத்தில் நடக்கும் அடுத்தடுத்த மரணங்களுக்கு காரணம் புரியாமல் தலையைப்
பிய்த்துக் கொள்கிறது, காவல்துறை.
தீவிர விசாரணையில் பலன் என்னவோ பூஜ்யம் தான்.
இந்நிலையில்
தொடரும் மரணங்களைத் தடுத்து நிறுத்த காவல்துறையும் நாயகனும் என்ன செய்கிறார்கள்? என்பது திக்
திக் திகில் கதை.

நாயகன்- நாயகி இருவருமே பள்ளி மாணவர்கள். மாணவராக எஃப் ஜெவும் மாணவியாக ஐராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களில் அனுதினமும் தன் தாயாரின் விபரீத நடவடிக்கைகளால் நரக வேதனையை அனுபவிக்கும் தன் கேரக்டரை நடிப்பால் தாங்கி நிற்கிறார்
ஐரா.

படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருப்பவர் ஐராவின் அம்மாவாக நடித்திருக்கும் மோன பத்ரே. வினோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பற்களை பிடுங்கிக் கொள்வது தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது என்று மிகவும் மாறுபட்ட கதாபாத்திரத்தை நெஞ்சுக்குள் திகில் பந்து உருளும் அளவுக்கு மிரட்டலாய் செய்திருக்கிறார்.

படத்தின் பிற்பகுதி யில் வரும் சாந்தினி தமிழரசனுக்கு முக்கியமான கதாபாத்திரம். தனது நடிப்பால் அந்த பாத்திரத்தில் அம்சமாக பொருந்திப் போகிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் எட்வர்ட் அந்த கேரக்டரில் நல்லாவே மேட்ச் ஆகிறார்.
கதையில் இருக்கும் அச்ச உணர்வுகளை கேமரா வழியே இன்னும் அதிகமாக்குகிறார் ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி.
இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை தான் ஜீவன். அதை உணர்ந்து இசையமைப்பாளர் அஷ்வின் கிருஷ்ணா இசைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் மணிகண்டன் ராமலிங்கம்.
மர்ம மரணங்கள் எப்படி நடக்கின்றன? அதன் பின்னணி என்ன ? அவற்றை எப்படித் தடுத்து நிறுத்துகிறார்கள்? என்பனவற்றைச் சொல்லிவிட்ட போதிலும், மர்ம மரணங்களுக்கான காரணத்தை இரண்டாம் பாகத்தில் தான் முழுமையாக சொல்லப் போகிறார் இயக்குனர்.
ஆக, இந்த பிகில் இரண்டாம் பாகத்திலும் தொடரும் என்பது உறுதி.

பிளஸ் : ஆவி கதைக்குப் பொருத்தமான நட்சத்திர தேர்வு.
மைனஸ்: அதிகபட்ச ரத்தம்.
ரேட்டிங்: 5/ 10.

Comments (0)
Add Comment