மிஸ்டர் எக்ஸ் — திரை விமர்சனம்

இந்திய முதன்மை வெளிநாட்டு உளவு அமைப்பான RAW வில் பணியாற்றும் உளவாளியான சரத்குமார், அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் ஒன்றை பல வருடங்களாக தனது பொறுப்பில் பாதுகாத்து வருகிறார். ஒரு முறை அந்த மூலப்பொருளை ரஷ்யாவுக்கு கடத்தி தனது பாதுகாப்பில் வைத்திருக்கும் போது அந்நாட்டு அரசால் கைது செய்யப்படுகிறார். அதோடு அவர் பாதுகாத்து வந்த மூலப்பொருளையும் கைப்பற்றும் அந்நாட்டு அரசாங்கம், அதை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்கிறது.

ரஷ்ய ராணுவத்தின் திட்டத்தை முறியடித்து, சரத்குமார் மற்றும் அணு ஆயுத மூலப்பொருளை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியை ரா அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையிலான குழு மேற்கொள்கிறது. ஆனால், அது தோல்வியில் முடிந்ததால், மஞ்சு வாரியரை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புத் துறை ஈடுபடுகிறது. அங்கிருந்து தப்பும் மஞ்சு வாரியர், மற்றொரு உளவாளியான ஆர்யா மூலம் மீண்டும் அந்த பணியில் ஈடுபட்டு சரத்குமாரை காப்பாற்றி, ஆணு ஆயுத மூளப்பொருளை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இம்முறை இவர்கள் முயற்சி வெற்றி பெற்றதா, அந்த மூலப்பொருளை வைத்து மேற்கொள்ள இருந்த வெளிநாட்டு சதி முறியடிக்கப்பட்டதா? என்பதை ஆங்கிலப் படங்களுக்கு நிகராக சொல்லி இருக்கிறார்கள்.

ஆர்யா கட்டுமஸ்தான தோற்றத்தில் கௌதம் என்கிற பாத்திரத்தில் வருகிறார். ஆக்சன் காட்சிகளில் அவர் காட்டும் அதிரடி ஒவ்வொன்றும் இடி வகையறா. தன்னை நேசிக்கும் காதலி அனகாவுக்காக உளவாளி பொறுப்பை உதறி விட துடிக்கும் இடங்கள் இவர் நடிப்பில் ரசனையுள்ள காதல் பக்கங்கள்.

மிஸ்டர் எக்ஸ் என்ற தலைப்பில் அறியப்படும் சரத்குமார் அந்த அதிரடி கேரக்டருக்கு என்ன வேண்டுமோ அதை தனது நடிப்பில் முழுமையாக கொடுத்துள்ளார். மகரையும் மகளையும் பாலைவனத்தில் எதிரிகளிடம் விட்டு விட்டு பயணப்படும் இடத்தில் பரிதவிப்புடன் கூடிய தந்தையை கண் முன் நிறுத்துகிறார்.

கௌதம் கார்த்திக்குக்கு அவர் நடிப்பில் இது முக்கியமான படம். இந்திய உளவாளியாக பணி முடிக்க வெளிநாட்டுக்கு போய், இந்திய உளவாளிகளுக்கே எதிரியாக மாறும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். வில்லத்தனத்தில் அவரது காய் நகர்த்தலும் நடிப்பும் அத்தனை சிறப்பு. சிரித்துக் கொண்டே வரும் சில வில்லன்களை திரையில் ஏற்கனவே பார்த்த போதிலும், அதிலும் புதிய மேனரிசம் இணைத்து பயமுறுத்துகிறார். இவருக்கும் ஆர்யாவுக்குமான அந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, நிஜமாகவே மிரட்டி விடுகிறது.

ரா அமைப்பு உயர் அதிகாரியாக வரும் மஞ்சு வாரியர் அந்த சவாலான சவாலான வேடத்தில் சரியாக வெளிப்படுகிறார். ஆக்சன் காட்சிகளில் புலியின் பாய்ச்சல்.

இவர்கள் தவிர ரைசா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

விழிகளை விரிய வைக்கும் பிரம்மாண்ட காட்சிகளை தனது கேமராவில் அசத்தலாகக் காட்டி பிரமிக்க வைக்கிறார், ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்.

கதையின் வீரியம் புரிந்து கொண்டு பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு
ஜீவன் தந்திருக்கிறார், திபு நினன் தாமஸ்.

விஷுவல் எபெக்ட் காட்சிகளில் ஹாலிவுட் தரம்.வாழ்த்துக்கள்
விஷுவல் இயக்குநர் சரத் வினுவுக்கு.
படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, சண்டைப்பயிற்சி இயக்குநர்
சில்வா, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் எனத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. மிகப்பெரியது என்பதையும் சொல்ல வேண்டும்.
நம் நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களின் பின்னணியில் காட்சிகளை உருவாக்கி
விறுவிறுப்பு குறையாமல் தந்த விதத்தில்
இயக்குநர் மனு ஆனந்த் தந்திருப்பது ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு தமிழ்ப் படம்.
ரா அமைப்பு, அது செயல்படும் விதம் போன்றவற்றை காட்சிப்படுத்தியதில் காணப்படும் நம்பகத்தன்மை படத்தின் இரண்டாம் பாகத்தையும் எதிர்பார்க்க வைக்கிறது.

பிளஸ்: காட்சிகளின் பிரம்மாண்டம்.
பிளாஷ்: இந்த சீன் எதற்கு என்று ஒரு இடத்தில் கூட கேட்க முடியாத நுண்ணிய இயக்கம்.

ரேட்டிங்: 6.5/10.

Comments (0)
Add Comment