நடிகர் அஜித் குமார் பிறந்தநாளில் ரீ ரிலீசாகும் ‘பில்லா’

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தமிழ்த் திரையுலகின் ஐகானிக் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘பில்லா’, அவரது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. நாயகியாக நயன்தாரா நடிக்க, விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கிறார். இந்த மறுவெளியீட்டை எம்.டி. பி. ஆண்டனி தாஸ் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் பட வெளியீட்டை சசிகலா புரொடக்ஷன் மேற்பார்வை செய்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த படம் 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்புடனும் புதிய போஸ்டர் வடிவமைப்புகளுடன் வெளியாகிறது.

2007ஆம் ஆண்டு வெளியான ’பில்லா’ திரைப்படம் அப்போதே மிகப்பெரிய வெற்றி பெற்று, நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா.

Comments (0)
Add Comment