சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பாக்யஸ்ரீ

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது. இந்தப் படத்துக்கு இதுவரை நாயகி யாரும் அறிவிக்கப்படாத நிலையில் இப்போது நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக இணைந்துள்ளார்.இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி கடந்த ஆண்டில் வெளியான காந்தா படத்திலும் தனது நடிப்பு முத்திரையை பதித்தவர்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ரசிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், இந்த அறிவிப்பு வெளியாகி அவரது ரசிக வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

Comments (0)
Add Comment