பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற வெற்றிப்
படங்கள் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது இன்னொரு இனிப்பான செய்தி. இது இளைய ராஜாவின் 1540-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கூறுகையில், “எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமான
ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும் தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலை தான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்கு சான்று. இசைஞானி இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக அவரது இசையை கொண்டாடி வ்
வந்தவர்களில் ஒருவனாக இருந்து நான் ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுப்பூர்வமான தருணம். சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடன், குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோருடன் இணைவதிலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்”. என்றார்.