ஜூன் 11 இல் திரைக்கு வரும் திகில் திரைப்படம் ‘டார்க் ஜெயிண்ட்’

ஒரு கிராமத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படமே டார்க் ஜெயிண்ட்.
இது முழுக்க முழுக்க ஒரு ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ளது .

இத்திரைப்படத்தை பயோவன் கிரியேஷனிசம் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால், அயலி மதன், ஜோவிட்டா லிவிங்ஸ்டன்,அமுத
வாணன், லிவிங்ஸ்டன் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
பாடல்களை கங்கை அமரன் எழுத விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார். இயக்கி இருக்கிறார், கே.எஸ்.கிஷன்.
இந்த படம் குறித்து இயக்குனர்
கூறுகையில்,
“ஹாரர் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு அதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பல ஊர்களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்த போது பல திடுக்கிடும் சம்பவங்களை தெரிந்து கொண்டேன். இப்படியும் கூட உலகம் இருக்கிறதா என்று அதிர்ச்சி அடைந்தேன்.
பல மனிதர்களிடம் உரையாடக்கூடிய சூழல் உருவாகியது .அதனை வெளியுலகத்துக்கு சொல்ல விரும்பினேன் ஆனால் அதை அப்படியே சொன்னால் பல பிரச்சனைகள் வரும் என்று தோன்றியதால் ஒரு சிறிய கருவை மட்டும் எடுத்து திரைப்படத்தை எடுத்துள்ளேன்.
இன்னும் சொல்லக் கூடாத விஷயங்கள் மறைக்கப்பட்ட விஷயங்கள் பல இந்த உலகத்தில் இருக்கின்றன.

ஜூன் 11 Dark Giant திரைப்படம் திரைக்கு வரும் போது உங்களுக்கு ஒரு சிறந்த ஹாரர் படம் பார்த்த திருப்தி
தரும்” என்கிறார்.

Comments (0)
Add Comment