இயக்குனர் பாலாஜி சக்திவேலை நாயகன் ஆக்கிய ‘ஆப் தி ரெக்கார்டு’

இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில், முக்கியமானவர் பாலாஜி சக்திவேல். சிறப்பான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்திய வர்களில் இவரும் ஒருவர்.
உணர்ச்சி ஆழமும் யதார்த்தமும் கொண்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும்
இவர், தனது திறமையான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.
‘டிஎன்ஏ’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம். ‘காந்தி கண்ணாடி’ படத்தில் மனதைத் தொடும் நடிப்பு. அதனைத் தொடர்ந்து ‘வாரண்ட்’ இணையத் தொடரில் மகன் மீதான அதீத பாசம் கொண்ட அப்பா கேரக்டர்.
இப்படி எடுத்துக் கொண்ட கேரக்டர் ஒவ்வொன்றிலும் தன் தனித்துவ நடிப்பால் அந்த கேரக்டருக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இந்த கலைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தற்போது அவர் 12 நிமிட பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் இரட்டை பரிமாணங்கள் கொண்ட கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஏ.ஆர். முத்துராமன் எழுதி இயக்கியுள்ள ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சாதாரண மனிதர் இடையே உருவாகும் உணர்வுப்பூர்வமான மோதல், பதட்டம் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை மையமாகக் கொண்டுள்ளது. 12 நிமிடங்களைக் கொண்ட இந்த பைலட் திரைப்படம்
யதார்த்தத்துடன் கூடியஉணர்ச்சிப்பூர்வமான அனுபவத்தை
பார்வையாளர்களுக்கு தர இருக்கிறது.

பல ஆண்டுகளாக குறும்படங்கள் மற்றும் காட்சிப்படுத்தல் முயற்சிகள் மூலம் தனது கலைத்திறனை மேம்படுத்தி வந்த முத்துராமன், தனது தீவிரமான சினிமா ஆர்வத்தை இந்த பைலட் படம் மூலம் வெளிப்படுத்தியுள்
ளார். தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் ஃபிக்‌ஷன் ஸ்டுடியோ வாயிலாக கதை சொல்லும் கனவுகளை தொடர்ந்து வளர்த்து வரும் அவர், ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தை தனது சினிமா பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக உருவாக்கியுள்ளார்.

‘ஆஃப் தி ரெக்கார்ட்’ குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

நடிகர்கள்: பாலாஜி சக்திவேல் மற்றும் ருக்மணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க, கொட்டாச்சி, ஆறு பாலா, பிரதீப் மற்றும் மீசை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் ஃபிக்‌ஷன் ஸ்டுடியோஸ்,
ஒளிப்பதிவு: பிரபாகரன்,
இசை: நரேந்தர்,
பாடகர்: ஆண்டனி தாசன்,
படத்தொகுப்பு: லெனின்.

Comments (0)
Add Comment