ஹீ மேன்: மாஸ்டர் ஆஃப் தி யுனிவர்ஸ் -திரை விமர்சனம்

வெளிநாட்டு காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பெறும் சூப்பர் மேனுக்கு நிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம்
ஹீ மேன். அதை இந்த தலைமுறை ரசிகர்களுக்காக இன்றைய அதிகபட்ச தொழில் நுட்ப வளர்ச்சி பின்னணியில் கரம் மசாலா தூவி தந்து இருக்கிறார்கள்.
ட்ராவிஸ் நைட் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த ஹீ மேன் எப்படி இருக்கிறார், பார்க்கலாம்.
பேரண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதனான ஆடம்
கிளவுன், இன்டர்னியா கிரகத்தின் முன்னாள் இளவரசனும் கூட.
தன் நண்பர்களான மேன்-அட்-ஆர்ம்ஸ் மற்றும் டீலாவுடன் தன் தாயின் இருப்பிட
மான
பூமிக்கு ஆடம் வருகிறான். அவன் பூமியில் இருக்கும் நேரத்தை பயன்படுத்தி தீய சக்தியும் கொடூர மந்திரவாதியுமான
ஸ்கெலிட்டர் எட்டர்னியா கிரகத்தை மட்டும் இன்றி மொத்த பேரண்டத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிடுகிறான். இதை தடுக்கும் பொருட்டு
ஆடமுக்கு இன் டர்னியா கிரக பயணம் அவசியமாகிறது. தங்கள் ராஜ பரம்பரைக்கே உரித்தான அதிசய சக்தி மிக்க வாள் அவன் பூமிக்கு வந்த இடத்தில் காணாமல் போக…
அந்த கொடுங் கோலனை எதிர்க்க அந்த வாள் அவசியம். எதிர்பாராத நேரத்தில் தொலைந்து போன அந்த வாள் கிடைக்க…
இப்போது ஆடம் தன் தந்தை இருக்கும் எட்டார்னியா தீவுக்கு பயணப்படுகிறான்.
ஆனால் அங்கே வந்தவுடன் தன் சொந்த வீடு தரைமட்டமாகி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான்.

கோளம் முழுவதும் கொடும் போர்வீரனும் மந்திரவாதியுமான ஸ்கெலிட்டார் (நடிகர் ஜாரெட் லெட்டோ) இரும்புப் பிடியில் சிக்கி இருக்க. தன் குடும்பத்தின் ராஜ மகத்துவத்தை மீட்டெடுக்கவும் உலகைக் காக்கவும், ஆடம் தன் நெருங்கிய நண்பர்களான டீலா (நடிகை கமீலா மெண்டெஸ்) மற்றும் மேன்-அட்-ஆர்ம்ஸ் டங்கன் (நடிகர் இட்ரிஸ் எல்பா) ஆகியோரோடு இணைந்து போருக்கு தயாராகிறான்.

ஒரு கட்டத்தில் ஸ்கெலிட்டாரை வீழ்த்த அவன் தன் உண்மையான அடையாளத்தை — பேரண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதனான ஹீ-மேனாக மாற வேண்டிய கட்டாயம்
நேர்கிறது. இந்த போரில் அற்புத சக்தி படைத்த அதிசய வாளின் துணையோடு ஹீ மேனாக
மாறி ஆடம் ஆடும் அதிரடி ஆட்டமே திகுதிகு கிளைமாக்ஸ்.
வழக்கமாக சாதாரண தோற்றத்தில் வந்து போகும் ஆடம், சீ மேலாக மாறும் போது சிக்ஸ் பேக் பாடியில் மிரட்டுகிறார்.
தங்கள் முன்னாள் தளபதி அவரது மகள் இருவரையும் தங்கள் கூட்டணியுடன் இணைத்துக் கொண்டு அவர் எதிரியை எதிர்கொள்ளும் இடங்கள் அத்தனையும் அக்மார்க் அமர்க்களம்.
அன்பை அழகான காதலை இப்படியும் சொல்ல முடியுமா? முன்னாள் ராணுவ தளபதி தனது மகனை அன்புடன் அணைக்க, அவர் இருவரையும் ஒரு சேர அழைக்கும் இடத்தில் நமது ஆடம் அன்புக்கும் காதலுக்கும் சேர்த்து மரியாதை செய்கிறார். நிஜமாகவே மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி அது.

ஃபேபியன் வாக்னர் ஒளிப்பதிவு எது கிராபிக்ஸ் எது நிஜம் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கண் வழி புகுந்து இதயம் வரை வியாபிக்கிறது.

டேனியல் பெம்பர்டன் இசை படத்தின் இன்னொரு பிளஸ் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தருணத்தில் ஸ்கெல்டான் அந்த கத்தியை அடைந்து உலகை தன் கண்ட்ரோலில் கொண்டு வர வேண்டும் என இண்டர்னியாவை தாக்க, அப்போது ராஜா தன் மகன் மற்றும் கத்தியை வேறு இடத்திற்கு போக சொல்ல, மகன் எப்படியோ பூமிக்கு வருகிறான்.

அங்கு வரும் போது ராஜாவின் மகன் ஆடம் அந்த கத்தியை தொலைக்க, 10 வருடங்களுக்கு மேலாக கத்தியை தேடி, சாமனிய மக்களுடன் இணைந்து வாழ தொடங்குகிறார்.

ஆனால், ஒரு வழியாக அந்த கத்தி கிடைக்க, அவரை தேடி ஸ்கெல்டான் ஒரு மிருகத்தை அனுப்ப, அங்கிருந்து தளபதி மகள் டீலா உதவியுடன் மீண்டும் இண்டர்னியா வந்து தன் ராஜாங்கத்தை ஆடம் கைப்பற்றினாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
ஆடம் ஆக நடித்தவர் ஹீ மேன் கதாபாத்திரம், அப்படியே பொருந்தி போகிறார், அவர் ஹீமேன் ஆக மாறும் போது, 6 பேக் உடற்கடுடன் செம கம்பீரமாக உள்ளார், அப்பாவியாகவும் சரி வீரனாக மாறும் போதும் சரி சின்ன எக்ஸ்பிரேஷன் மாற்றதுடன் கலக்கியுள்ளார்.
பூமிக்கு வரும் மனித மிருகத்திடம் இருந்து ஆடம் ஹீ மேன் ஆக மாறி தப்பிக்கும் இடத்தில் வரும் சேஸிங் சீன் திரை தாண்டி மிரட்டுகிறது.
மொத்தத்தில் இந்த ஹீ மேன், அடிக்கடி
‘வா மேன்’ என்று சொல்ல வைக்கிறான்.

Comments (0)
Add Comment