ஆட்டி என்றால் தலைவி அல்லது முதன்மையானவள் என்று பொருள். 1970-களில் ஒரு மலைக் கிராமத்தில் நடக்கும் கதை. படிப்பறிவு இல்லாத, அதாவது படிக்க வாய்ப்பு இல்லாத தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழும் ஊரில் பேருக்கு ஒரு தபால் நிலையம், காவல்நிலையம் என்றிருக்கும் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை ஆய்வாளர் இசக்கி கார்வண்ணன்.
ஒரு வழக்குகூட வராத அந்த காவல் நிலையத்துக்கு இந்த ஆய்வாளர் வந்த நேரத்தில் ஒரு கொலைவழக்கு வர, அந்த கொலைக்கான பின்னணி என்ன என்ற ரீதியில் போகிறது கதை.
அந்த ஊர் ஜனங்கள் போராடிப் பெற்ற பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியர் தான் வருவதாக இல்லை. அப்படியே ஆசிரியர் யாராவது வந்தாலும் அந்த ஊர் சூழல் பிடிக்காமல் மாற்றல் வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கத் தொடங்கினார்கள்.
எனவே அந்த ஊரில் அதிகம் படித்த இளம்பெண் அபி நட்சத்திரா மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். படிப்பை விரும்பாத அந்த மாணவர்களும் அபி நட்சத்திரா தங்கள் கண்களில் பட்டதும் எஸ்கேப் ஆகிறார்கள்.
இந்த நிலையில் அந்த ஊருக்கு ஆசிரியராக வந்தவர், வந்த இரண்டொரு தினத்தில் கொலை செய்யப்படுகிறார்.
அவரை கொன்றது யார்? ஏன்?,என்கிற கோணத்தில்
போகிறது படம்.
காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன், காக்கி சட்டையில் கம்பீரம் காட்ட முயன்றிருக்கிறார். அதிகம் பேசாமல் தனது நடிப்பை பேச வைத்திருக்கிறார்.
நாலெழுத்து படித்த இளம் பெண்ணாக
அபி நட்சத்திரா வருகிறார். அவரது வேடமும் நடிப்பும் இயல்பாக அமைந்து அந்த கேரக்டருக்கு முழுமை தருகிறது. தன்னை சீண்டிய ஆசிரியரிடம் சீறும் காட்சி சிறப்பு.
நகைச்சுவைக்கென இருக்கும் காதல் சுகுமார்,அஞ்சல்காரர் சௌந்தர், பள்ளி ஆசிரியர் பிரவீன் பழனிசாமி,காவலராக வரும் செல்வகுமார், கரண் சக்ரவர்த்தி ஆகியோரும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்
தீசனின் இசை, படம் முழுக்க ஒருவித பதற்றத்தை
விதைத்துக் கொண்டே செல்கிறது.
1970 காலகட்டத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறார், கலை இயக்குநர் முஜிபுர் ரகுமான்.
திருமுருகன் திரைக்கதையில் கிட்டு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படம், பெண்களை போற்றும் நிலை, சிறுதெய்வ வழிபாடுகள் ஆகியனவற்றை போதிய சஸ்பென்சுடன் சுவைபட சொல்லி இருக்கிறது.
அதோடு நில்லாமல் தமிழினப்
பெருமையையும் பேச முயன்றிருக்கிறது. கொலையாளி யார் என்ற அந்த கிளைமாக்ஸ் மொத்த படத்தையும் தாங்குகிறது.
பிளஸ்: வலிமையான திரைக்கதை.
பிளாஷ்: மலை கிராமத்துக்குள் நம்மையும் இழுத்துச் சென்று விடும் சிபி சதாசிவத்தின்
ஒளிப்பதிவு.
ரேட்டிங்: 6.5/ 10.