நிழல் -திரை விமர்சனம்

மருத்துவரான ஜனனி, தொழிலதிபர் சிவன் சீனிவாசனின் மகன் ஹரி விஜய் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை கொடூரமாக தாக்கி கொல்ல முயல்கிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அவர்கள் தீவிர சிகிச்சையில் உயிர் பிழைக்கிறார்கள் .
தொழிலதிபரின் மனைவி தன் மகனின் இத்தகைய நிலைக்கு காரணமான ஜனனியை
காவல்துறை அதிகாரி ஒருவரது உதவியுடன் கண்டு பிடிக்கிறார். அப்போது ஜனனி பற்றிய பல அதிர்ச்சிகரமான உண்மைகள் ஒரு பக்கம் தெரிய வர..
அதே நேரம் ஜனனியின் இந்த கொடூர தாக்குதல்களுக்கான காரணம் என்ன? என்பதையும்
விறுவிறுப்பான திருப்பங்களோடு தந்திருக்கிறார்கள்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஜனனி, முதல் முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில், ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். இரட்டை வேடத்திலும் வித்தியாசம் காட்டுகிறார். கோபம் மற்றும் பழிவாங்கும் உணர்வு என பல பரிமாணங்களை சரியான மீட்டரில் வெளிப்படுத்தியிருக்
கும் ஜனனி, தொடர்ந்து படங்களில் ஆக்சன் அவதாரம் எடுத்தாலும் ஆ
ஆச்சரியப்படுவதற்கில்லை

காவல்துறை அதிகாரியாகவும், ஜனனியின் காதலனாகவும் நடித்திருக்கும் விஷாகன், கிளைமாக்ஸ்சில் காக்கி சட்டைக்கு வேலை கொடுத்திருக்கும் இடத்தில் நடிப்பில் ” போட வைக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஹரி விஜய், தனது அடாவடி செயல்கள் மூலம் அந்தப் பாத்திரத்தை தனது நடிப்பால் நிரப்பி இருக்கிறார்.

இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் கெளஷிக், கதையின் திருப்புமுனையான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வந்து ‘உள்ளேன் ஐயா ‘ சொல்ல… அநீதிக்கு துணை போகும் வழக்கறிஞராக அபிஷேக் சங்கர் நடிப்பில் சதம் அடிக்கிறார்.
ஜனனியின் தந்தையாக வரும் ரமேஷ் கண்ணா மகளுக்கு நேர்ந்த கொடுமையை பார்த்து கலங்கும் இடத்தில் அனுபவ நடிப்பில் நம்மையும் கலங்கடிக்கிறார்.
நாயகியின் தோழியாக திவ்யா கிருஷ்ணன், வில்லனின் அப்பாவாக சிவன் சீனிவாசன் தங்கள் கேரக்டரில் நடிப்புத் தடம் பதிக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர் மோகன்குமாரின் கேமரா ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி பாய்ச்சல் காட்டி இருக்கிறது.
அபூபக்கர் இசையில் ‘அடியே அழகே’ பாடல் நெஞ்சுக்குள் சுகராகம் மீட்டுகிறது.
ஏ கே குமார் இயக்கியிருக்கிறார். நீதியை அநீதி வளைக்கும்போது தோட்டாக்கள் வெடித்தால் தப்பில்லை என்பது வழக்கமான கிளைமாக்ஸ் ஆக இருந்தாலும், இந்தப் படத்தில் அது சரியான தீர்வாகவே உணர வைக்கிறது.

பிளஸ்: இயல்பான கதைப் போக்கு.

பிளாஷ்: பழிவாங்கும் பெண்ணின் கோணத்திலிருந்து சொல்லப்பட்ட கதை.

ரேட்டிங்: 6 /10.

Comments (0)
Add Comment