அன்பு அம்மாவும் அக்கு ஆன்மாக்களும் புத்தக வெளியீட்டு விழா

லூசுப்பெண் ஜென்சி எழுத்தில் அன்பு அம்மாவும் அக்கு ஆன்மாக்களும் எனும் நாவல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத் (டி.வி.கே) அவர்கள், வி.எம்.எஸ் முஸ்தபா ( சட்டமன்ற உறுப்பினர் மதுரை மத்திய தொகுதி (டி.வி.கே) நடிகர்கள் ஜே.எம்.பஷீர்,
எம்.சௌந்தரராஜா, திருமதி மு. ராஜேஸ்வரி (தலைவர், அனைத்து மக்கள் அரசியல் கட்சி) திருமதி கீதா மணிவண்ணன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ) இயக்குனர் ஆர். அரவிந்தராஜ், இயக்குனர் வ.கீரா நடிகர் விஷ்ணுப்பிரியன் சமூக ஆர்வலர் மற்றும் அரசியல் விமர்சகர் திருமதி நாச்சியாள் சுகந்தி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜே.எம் நசீர் சுல்தான், ஏ.பி.ஆரிஃப், திருமதி நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழாவில்
நாஞ்சில் சம்பத் பேசுகையில்,
“தமிழ்நாட்டில் வாசிக்கிற தளம் தரைமட்டமாகிக் கொண்டிருக்கிறது.
இது ஆணாதிக்கம் கொண்ட சமூகம் தான். இதற்கு பாரதியும் விதி
விலக்கல்ல. பாரதிதாசனும் விலக்கல்ல..ஆகவே ஒரு இலக்கியம் படித்தவன் தமிழ் கற்றவன் என்ற தகுதியில் சொல்கிறேன். ஜென்சி எழுதிய இந்த நூல் முழுவதும் ஒரு சமய நல்லிணக்கத்திற்
கான சாமரத்தை எடுத்து ஜென்சி வீசி இருக்கிறார்” என்றார்.

வி.எம்.எஸ் முஸ்தபா பேசும்போது,
“குர்ஆனில் இருக்கும் உண்மை செய்தியை தத்ரூபமாக சாமர்த்தியமாக எல்லாருக்கும் புரியும்படியாக எழுதி இருக்கிறார் ஜென்சி. குர்ஆனையும் இயேசுவைப் பற்றியும் சிவனைப் பற்றியும் இந்த புத்தகத்தில் கூறியிருக்கிறார்கள்.இப்ராஹீமை பிரம்மாவாகவும் காயத்ரி தேவியை, ஹாஜிராமா என்றும் சாரா வதியை சரஸ்வதி என்றும் போதிக்கிறார்கள்.ஆக மொத்தம் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் எல்லாரும் ஒன்றே ஒரே சமயத்தினரே மனித குலத்தினரே. இந்த அடிப்படையில் எமது தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறி ஒரு நல்லாட்சியை தந்திருக்கிறார்” என்றார்.

நடிகர் சௌந்தரராஜா பேசுகையில்,
“முதலில் இந்த அக்கு என்பதற்கு எனக்கு அர்த்தம் விளங்கவில்லை.. பிறகு தான் தெரிந்தது அக்கு, அக்குபஞ்சர் மருத்துவத்தையும் குறிக்கும், ஆன்மா வையும் குறிக்கும் என்று. பொதுநலத்தோடு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் ஜென்சி .இங்கு வந்ததில் ஒன்று தெரிந்து கொண்டேன் புத்தகம் எழுதிய ஜென்சி கிறிஸ்தவர் அவருக்கு உந்துதலாய் இருந்தவர் ஹிந்து.. இந்த புத்தகத்தை வெளியிட்டவர் நசீர் என்ற இஸ்லாமியர்… இதுதான் ஒற்றுமையான நம் தமிழ்நாடு” என்றார்.

எழுத்தாளர் மற்றும் கவிஞர் நாச்சியார் சுகந்தி பேசியதாவது.
“தமிழில் பெண்ணின் சாயல் இல்லாத எந்த புத்தகமும் இல்லை.. சங்க இலக்கியத்தில் இருந்து இன்று ஜென்சி புத்தகம் வரை பெண் இல்லாமல் எந்த எழுத்துக்களும் இல்லை.. என்னை மாதிரி பெண்களுக்கு அறிவியல் மட்டும்தான் தெரியும்.மரபு வழி மருத்துவம் என்பது எனக்கு கேள்விக்குறியான ஒன்று. மற்றபடி அதை நம்புகிற மக்களுக்கு அது ஒரு உந்து சக்தி.. அறிவியல் பிரசவத்தை நம்பும் மக்களுக்கு இந்த நாவல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது” என்றார்
இயக்குனர் அரவிந்தராஜ் பேசும்போது,
“நாவலை எழுதிய லூசுப் பெண் என்ற வார்த்தை ஜென்சிக்கு சில இடங்களில் பொருந்துவது மாதிரி இருந்தது… ஆண்கள் மேல் அவர் பயங்கரமான கோபத்தில் இருந்திருக்கிறார்.
ஆனால் அவர்களின் கதையிலேயே பல நல்ல ஆண்களும் வந்து போயிருக்கிறார்கள் ஜென்சி எழுதிய புத்தகத்தை திறனாய்வு செய்யும் பொழுது உங்கள் கதைகளில் வரும் அத்தனை கேரக்டர்களையும் கூட்டிட்டு வாங்க பார்க்கணும் என்றும், ஒன்றரை நாளே வாழ்ந்த குழந்தை தன் மகன் அன்புமா இறந்தபோது மகனைப் பார்க்கச் சென்ற அம்மாவின் கதையை (காட்சியை) படிக்கும் பொழுது என் கண்கள் கலங்கியது.. பிரசவம் என்பதும் பிரசவ வலி என்பதும் ஒரு பெண்ணுக்கு மறு பிறப்பு என்பதை இந்த நாவலில் சிறப்பாக சொல்லியிருக்கிறார்” என்றார்.

சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் லூசுப் பெண் ஜென்சியை வாழ்த்தி பேச, இறுதியில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறி முடித்தார் ஜென்சி.

Comments (0)
Add Comment