இன்னும் பத்து வருடத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜெயிப்பேன்”

அங்கீகாரம் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் நாயகன் உறுதி

முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது.
“அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தப் படம் கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவர்களின் போராட்டங்களையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விளையாட்டில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இப்படம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு உத்வேகத்தை அளிக்கும்.
மேலும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளரின் பணியும் சிறப்பு. படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. “அங்கீகாரம்” யாரும் தவற விடக் கூடாத படம் என்றும், அனைவரும் திரையரங்குகளில் பார்த்து படத்திற்கு இன்னும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.”
நடிகை இசபெல்லா பேசியதாவது.
“அங்கீகாரம்” எனக்கு கிடைத்த முதல் அடையாளம். இதுவரை மேடையேறி பேசியதில்லை. முதன்முறையாக இந்த மேடையில் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இயக்குநர் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து, இந்தப் படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தார். கே ஜெ ஆர் சார் மிகவும் கம்ஃபர்ட்டாக நடிக்க வைத்தார். படத்தில் எனக்கு ‘தங்கமயில்’ என்ற பெயர் வைத்ததற்கும் நன்றி. ஜிப்ரான் சாரின் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரைப் போன்ற கலைஞருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு முழுவதும் என்னை ஊக்கப்படுத்தினார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை இவ்வளவு அழகாக திரையில் காட்டிய எடிட்டர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
நடிகை வசுந்தரா பேசியதாவது,
“அங்கீகாரம் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். சினிமாவுக்காக தேவையில்லாத மிகைப்படுத்தல்களை சேர்க்காமல், வாழ்க்கைக்கு நெருக்கமான முறையில் முக்கியமான ஒரு கருத்தை இயக்குநர் தென்பாதியான் சொல்லியிருக்கிறார்.
இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கே.ஜெ.ஆர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய தோற்ற மாற்றமும், அர்ப்பணிப்பும் மிகவும் பிரமிக்க வைத்தது. பீட்டர் ஹெயின் மாஸ்டருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ஜிப்ரான் சாரின் இசை எப்போதும் போல அற்புதமாக அமைந்துள்ளது.
அருண், பிரசாந்த், அஜித் ஆகிய இளம் தயாரிப்பாளர்கள் முக்கியமான ஒரு கதையை நம்பி இப்படத்தை உருவாக்கியிருக்கி
றார்கள். இப்படம் வெற்றி பெற்றால்தான் இதுபோன்ற நல்ல படங்கள் தொடர்ந்து உருவாகும். இந்தப் படத்தையும் உங்கள் மனதில் இடம் கொடுத்து, தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது.
“அங்கீகாரம் படத்திற்கு பத்திரிகையாளர்கள் அளித்த விமர்சனங்களும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதற்காக அனைவருக்கும் என் நன்றி. கே.ஜெ.ஆர் தயாரிப்பாளராக இருந்தாலும், நடிகராக இருந்தாலும், சமூகப் பொறுப்புள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அடுத்த படமும் அதுபோன்ற முக்கியமான கருத்தை பேசும் படமாக இருக்கும்.
ஒரு கதைக்குள் மனிதர…

Comments (0)
Add Comment