2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால்- ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் கட்டா குஸ்தி. நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கி
றது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாகி இருப்பது சிறப்பு. முதல் பாகத்தை விடவும் இது இன்னமும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருப்
பது சிறப்போ சிறப்பு.
முதல் பாகத்தில் மனைவிகள் என்றால் அடிமைகள் என்கிற எண்ணம் கொண்ட நாயகன் விஷ்ணு விஷாலுக்கு அதிரடி மனைவியாக மல்யுத்த வீராங்கனை ஐஸ்வர்யா லட்சுமி வாய்க்கிறார். அதனால் நடக்கும் நிகழ்வுகளும் உண்மை தெரிந்த கணவர் கொந்தளிப்பதும், காலப் போக்கில் அவரே மனைவியின் திறமையை அங்கீகரிப்பதுமாய் படம் உற்சாகமாக போகும்.
இரண்டாம் பாகத்தில், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நாயகிக்கு ரயில்வே
யில் வேலை கிடைக்கிறது. ஐந்து வயது நிரம்பிய மகள் சாரா பள்ளிக்கு போகிறாள். மனைவியையும் குழந்தையையும் கண்ணுக்கு கண்ணாக பார்த்துக் கொள்கிறான் கணவன்.
வேலை ஒரு பக்கம் இருந்தாலும் மல்யுத்த போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
இதற்கிடையே அவருக்கு கோச்சாக இருக்கும் நபர் ஐஸ்வர்யா லட்சுமி மீது பொறாமை கொள்ளும் அளவுக்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பதிலாக மல்யுத்தத்தில் இன்னொரு பெண்ணை உருவாக்க நினைக்கும் அவர், தோற்கவே வாய்ப்பு இல்லாத ஐஸ்வர்யா லட்சுமியை அந்த பெண்ணை கொண்டு தோற்கடிக்கிறார்.
இந்த தோல்விக்கு அந்த கோச் மறைமுகமாக பயன்படுத்துவது ஐஸ்வர்யா லட்சுமியின் கணவரை.
கோச்சின் தவறானஆலோசனையைக் கேட்டு ஊக்க மருந்து என்ற பெயரில் போதை மருந்தை மனைவிக்கு கணவரை கொடுக்க வைத்தது அவர் தான்.
இதன் பிறகு தோற்ற அதிர்ச்சி போதா தென்றுபோதை மருந்து பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஐஸ்வர்யா லட்சுமி ஓராண்டு விளையாட தடை விதிக்கப்படுகிறது.
இதற்குப் பிறகு தான் தனது இந்த தோல்வி பின்னணியில் தனது கணவர் இருப்பது ஐஸ்வர்யா லட்சுமிக்கு தெரிய வர… இதுவே தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்படுத்தி விவாகரத்துக்காக கோர்ட் வரை கொண்டு போகிறது.
சட்டம் அவர்களை பிரித்ததா? அல்லது தம்பதிகளுக்கு உள்ளான புரிதல் அவர்களை இணைத்ததா? என்பது பரபரப்பை பற்ற வைக்கும் சரவெடி கிளைமாக்ஸ்.
கொஞ்சம் சீரியஸ் ரகமான இந்த கதைக்குள் சோகம் தானே பிரதானமாக இருக்க வேண்டும். அதுதான் இல்லை. காமெடித் தோரணம் கட்டி கலகலவென படத்தை கொண்டு போகிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.
முதல் பாகத்தில் தெனாவெட்டாக சுற்றித்திரியும் பெரும்பாலான கணவர்களின் ஜெராக்ஸ் போல் வந்த விஷ்ணுவிஷால், இந்த இரண்டாம் பாகத்தில் பொறுப்பான கணவன், பாசமிகு அப்பா என அந்த கேரக்டரை தனது நடிப்பால் அழகாக வார்த்திருக்கிறார்.
மகள் சாராவுக்கும் இவருக்குமான அந்த அன்பு தனி ரகம். ஒவ்வொரு பாசமிகு அப்பா- மகளுக்கானது. மகளின் வகுப்பு டீச்சர் மோக்ஷாவுக்கும் இவருக்குமான நட்பு எல்லை தாண்டாத இலக்கணமாய் காட்சிப்படுத்தப்பட்டி
ருப்பது கூட அத்தனை சிறப்பு.
மனைவியின் தோல்விக்கு நாம் காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வு தன்னை படுத்தி எடுக்கும் நேரத்தில் அவர் ஏற்ற அந்த வீரா கேரக்டர் நடிப்பில் விஸ்வரூபம் எடுக்கிறது.
அந்த மல்யுத்த வீராங்கனை கீர்த்தி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி வரும் காட்சிகள் எல்லாமே அக்மார்க் அமர்க்களம்.
ஆரம்ப கட்டங்களில் கணவரிடம் சின்ன சின்ன கோபம், ஒரு கட்டத்தில் அதுவே பிரிவு வரை கொண்டு போகும் இடங்களில் நடிப்பில் சிக்சராக
விளாசுகிறார். கணவரை மல்யுத்தத்தில் ஜெயித்தே ஆக வேண்டிய அந்த கிளைமாக்ஸ் தம்பதிகள் இருவருக்கும் நடிப்பு மகுடம் சூட்ட வேண்டிய ஒரு இடம்.
இவர்களுடைய மகளாக நடித்திருக்கும் சிறுமி சாரா, எல்லோர் மனதையும் நடிப்பால் அள்ளிக் கொள்கிறாள். சமீபத்திய திரை வரவுகளில் க்யூட் பேபி இவர் தான்.
சாராவின்
பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் மோக்ஷாவின் நடிப்பும் உடல் மொழியும் நன்று. அவரை அளவோடு பயன்படுத்தியிருப்பது அழகு.
கருணாஸ் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் தனது காமெடி அலப்பறைகளால் அரங்கை சிரிப்பால்
நிறைக்கிறார். குறிப்பாக மனைவி பஞ்சாயத்து தலைவரான பிறகு அடக்கி வாசிக்கும் அந்தக் கணவன் நடிப்பு நிஜமாகவே அடேங்கப்பா ரகம்.
முனிஷ்காந்த்,
காளி வெங்கட், கருணாகரன், நக்கலைட் பிரசன்னா பாலச்சந்திரன், கஜராஜ் தங்கள் பங்குக்கு அரங்கை சிரிப்பால் நிரப்புகிறார்கள்.
நீதிபதியாக ரம்யா கிருஷ்ணன் வரும் கொஞ்ச நேரத்திலும் கூடவே கலகலப்பும் கைகோர்த்துக் கொள்கிறது. கிளைமாக்சில் போட்டி வர்ணனையாளராக சிறப்புத் தோற்றத்தில் வந்து படத்தின் கூடுதல் கலகலப்பை உறுதி செய்கிறார் யோகி பாபு.
கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் உணர்வுகள் திரையிலும் நிரம்பி வழிகின்றன.
ஷான் ரோல்டன் இசையில் சம்பவக்காரி, மகராசி பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. காட்சிகளோடு பின்னிப் பிணைந்த
பின்னணி இசை நிஜமாகவே பிரமிப்புடன் கூடிய மாயாஜாலம்.
எழுதி இயக்கியிருக்கிறார் செல்லா அய்யாவு. முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதைக் கொடுக்கத்தான் நவரசமாய் ஒரு கதை பண்ண நாலு வருடங்கள் பொறுமையாக காத்திருந்தாரோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு, இந்த இரண்டாம் பாகம் மனமெங்கும் சந்தோஷ அலைகளால் நிரம்பி நிற்கிறது. (ஒரு இடத்தில் கூட படம் தேங்கவில்லை. நதி போல ஓடிக் கொண்டே இருக்கிறது.)
மனைவியை பிரிந்த தனது மாப்பிள்ளையும் கவலையாகவே இருப்பார் என்று என்னும் கஜராஜ், மொத்த குடும்பத்தையும் மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வரும் போது, மாப்பிள்ளையோ மகளின் டீச்சருடன் ‘அப்படி போடு போடு’ பாடலுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க… மனைவி உள்ளிட்ட மொத்த குடும்பமும் அந்தக் காட்சி பார்த்து அதிர்ச்சி விலகாமல் நிற்க…
நிஜமாகவே நகைச்சுவையின் உச்சம் அந்த இடம்.
குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து ரசித்து சிரித்து மகிழக்கூடிய படத்தை சமுதாயத்துக்கு தேவையான நல்லதொரு கருத்தையும் அளவோடு இணைத்து தனக்கான
இயக்க சிறப்பை இரண்டாம் பாகத்திலும் தக்க வைத்துக் கொள்கிறார், இந்த செல்லா அய்யாவு.
பிளஸ்: சிரிப்பு
இழைகளால் பின்னப்பட்ட சீரியஸ் கதைக்களம்.
பிளாஷ்: இமைக்கவும் விடாத அந்த கணவன் மனைவியின் மல்யுத்த கிளைமாக்ஸ்.
ரேட்டிங்: 8.5/10.