Tam’s consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் தயாராகிறது. 2017 ஆம் ஆண்டு போங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் தாஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைக்கும் இப்படமானது, இம்மக்களுக்கு நடந்த அநீதியை உண்மைத் தன்மை மாறாமல் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
இவர்களின் வாழ்வில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை இந்த மக்களின் குரலாக உணர்வுபூர்வமாக இந்தப் படம் வெளிப்படுத்தும்.
கதையின் அமைப்புபடி 2010 காலகட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் கதை இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இவர்கள் மாதிரியான பின்தங்கிய நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்கையில் படிப்பு மற்றும் விளையாட்டின் மூலம் ஊடுரு
வும் இடஒதுக்கீடு அரசியலுக்கும் இது பொருந்தும். குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலுக்கு மிக முக்கியமாக பொருந்தும்.
கதையின் நகர்வு இம்மக்களுக்கு படிப்பு மற்றும் விளையாட்டுத் துறையில் திறமை இருந்தும் இவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் அடையாளம் அதிகார வர்க்கத்தால் எவ்வாறு தடை படுகிறது… அதனை மீறி அவர்கள் அதில் சாதித்த பின்னரும் அவர்களின் வாழ்வாதாரம் எந்தளவு மாற்றம் கொண்டுள்ளது என்பது பற்றிய திரைப்படம் தான் இது..
வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறும் இந்த தேசத்தில் ஏதோ ஒரு பரிமாணத்தில் ஒடுக்க முறை ஒளிந்து கொண்டிருப்பதை ஒளித்திரையில் மறைவின்றி பிரதிபலிக்கும் நோக்கமே இப்படைப்பு.
இப்படைப்பில் உறுதுணையாக நின்று உழைத்த
தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் வருமாறு:
1. தமிழ்வாணன் -கதைநாயகன்
2.அபிராமி- கதை நாயகி
3.Csk சரவணன்
4.Bigboss பிரவீன்
5.ஜெய்பீம் மொசக்குட்டி
6.அகத்தியன்
7.விஜயலக்ஷ்மி
8.அருணாச்சலம்
9.lion சுரேஷ்
10.மைக்கேல்
11.ஸ்ரீ ராம்
12.கெளசல்யா
மற்றும் உண்மையான மலைவாழ் கிரிக்கெட் வீரர்கள்.