ஒன் மேன்-திரை விமர்சனம்

சங்ககிரி ராஜ்குமார் என்ற ஒற்றை மனித ரின் அசாத்திய உழைப்பும் அபரிமிதமான திறமையும் வித்தியாசமான முயற்சியும் புகழ் மேடையில் ஏற்றியிருக்கிறது, இந்த ‘ஒன் மேனை’.

நடிப்பு என்று பார்த்தால் படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களிலும் இவர் தான் காணப்படுகிறார். கதையில் அம்மாவாக வரும் கேரக்டரிலும் இவர் தான் இருக்கிறார்.

இப்படி அங்கிங்கெனாதபடி திரையில் தூணிலும் இவர் தான் இருக்கிறார். துரும்பிலும் இவர் தான் இருக்கிறார்.

கலை இயக்கமா, ஒளிப்பதிவா, வசனமா, இசையா, சண்டைக் காட்சிகளா… இப்படி படத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பும் இவர் தான். கதையில் கூட இவரது தனித்துவம் பளிச்சிடுகிறது.

விஞ்ஞானிகள் லெவலில் தனித்திறமை கொண்ட ஐந்து பேருக்கு அரசு விருது அறிவிக்கிறது. விருதுக்குரிய ஐவரும் நண்பர்கள். எனவே அனைவரும் ஒன்றாக காரில் விருது பெற புறப்படுகிறார்கள். போகும் வழியில் காட்டுப் பகுதியை எட்டும்போது கார் மக்கர் பண்ண… வேறு வழிஇன்றி அந்த இரவு அவர்கள் அங்கே தங்க வேண்டியது ஆகிறது.
காட்டுக்குள் இந்த ஐவரும் ஒரு மர்மமான சோதனைக்கூடத்தை கண்டுபிடிக்கின்றனர். அங்கு கிடைக்கும் செல்போன் மூலம், ஒரு பரிசோதனையை வெற்றிகரமாக முடித்தால், 10 நாட்களுக்கு உலகில் வேறு எந்த உயிரினமும் இருக்காது என்ற அதிர்ச்சிகரமான தகவலை அறிகின்றனர். அதை சோதித்துப் பார்க்கவும் முற்படுகிறார்கள்.
அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே படத்தின் கதைக் களம்.
இந்தக் கதைக்குள் வரும் அத்தனை கேரக்டரிலும் இவர் மட்டுமே நடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார், இந்த சாதனை முயற்சியில் வெற்றி வாகை சூடி இருக்கும் சங்ககிரி ராஜ்குமார்
படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம்.
சங்ககிரி ராஜ்குமார். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, சவுண்ட், மேக்கப், கிராபிக்ஸ் என 24-க்கும் மேற்பட்ட துறைகளின் பணிகளை ஒரே நபராக செய்து முடித்திருக்கிறார்.

அதிலும் ஒரே நடிகர் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களாக ஒரே பிரேமில் தோன்றும் காட்சிகள் எல்லாம் படத்தை வேற லெவலில் கொண்டு போய் நிறுத்துகின்றன.
இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்ற விடை தெரிந்தும், கேள்வியாகவே மனதில் நீடித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக அமெரிக்காவில் படமாக்கப்பட்டது போன்ற பிரம்மாண்ட காட்சிகளும் தொழில் நுட்பமும் தனி கவனம் பெறுகின்றன.
இதை நம்ப முடியாதவர்களுக்காக
படத்தின் முடிவில் இடம்பெறும் மேக்கிங் காட்சிகள், நம் கண் முன் நம்பகத்தன்மையுடன் விரிகின்றன. இந்தப் படத்தை உருவாக்க சங்ககிரி ராஜ்குமார் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன.
இந்த கதையிலும் அம்மா சென்டிமென்ட் இருக்கிறது. பேராசை, நண்பர்களை தூரமாக்குகிறது. எல்லாம் எனக்கு எந்த எனக்கே என்ற அந்த பேராசை கொலையைக் கூட தயங்காமல் செய்ய வைக்கிறது.

இது ஒரே ஒரு மனிதரால் எப்படி முடிந்தது?” என்ற கேள்விக்கு, நீங்கள் படம் பார்த்து பிரமிப்பது ஒன்றே பதிலாக இருக்கும் .
விருது கொடுத்து கொண்டாட வேண்டிய படைப்பு.
ஒன் மேன், கிரேட் மேன்.

Comments (0)
Add Comment