வட இந்திய மாநிலங்களிலும் ‘தங்கலான்’ கொண்டாட்டம்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு படமும் வெற்றிப்பட்டியலில் சேர்ந்தது. ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.

இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் தங்கலான் வெளியானது.
வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

வட இந்திய ஊடகங்கள் இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கம், சீயான் விக்ரம் , பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடிப்பு, ஜீவி.பிரகாஷ் இசை என அனைத்தையும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் தங்கலான் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் படத்தின் வெற்றியும்ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா , பா.ரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் மற்றும் படக்குழுவினரை உற்சாகத்தில் வைத்திருக்கிறது.

Comments (0)
Add Comment