இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் பாடலை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இன்றைய இளம் தலைமுறையினரிடையே இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்கள் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. சமீபத்தில்
தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார் இசையில், இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் எழுத்தில் வெளியான, ‘ச்சீ ப்பா தூ…’ பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்பாடலின் வீடியோ ஆல்பத்தை பார்த்த கமல்ஹாசன் பாடலினால் கவரப்பட்டு, அக்குழுவினரை அழைத்து பாராட்டியதுடன், அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த பாராட்டினால் இக்குழுவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
இப்பாடலை முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் வாஹீசன் ராசய்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு சக்திவேல் நடன அமைப்பை செய்துள்ளார், மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ இசை ஆல்பத்தை இயக்குநர் அனந்து இயக்கியிருக்கிறார்.