மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் மாதவன் படம் ‘மின்னலே’

சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் டாக்டர் முரளி மனோகர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கௌதம் ( பின்னாட்களில் கௌதம் மேனன் ஆகி, இப்போது கௌதம் வாசுதேவ மேனன்) இயக்கத்தில் மாதவன் – ரீமா சென், அப்பாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மின்னலே’. ஹரிஷ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.
2001-ம் ஆண்டு வெளியான இந்த படம் காதலை புதிய கோணத்தில் சொல்லி ரசிகர்களின் கொண்டாட்டமானது.

25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது.காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார்.

‘அலைபாயுதே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மாதவன் நடித்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment