மைலாஞ்சி — திரை விமர்சனம்

வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, அபூர்வ வகை பறவை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அங்கு மைலாஞ்சி என்ற பெயரில் பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் நாயகி கிரிஷா குரூப்பிடம் நட்பாகிறார்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் கிரிஷா மீதான நட்பு ஸ்ரீராமுக்குள் காதலாக மாறுகிறது. தன் காதலை கிரிஷாவிடம் சொல்ல நினைத்த நேரத்தில் கிரிஷாவோ, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாது என்றும், காதலனுடன் சேர்த்து வைக்குமாறும் ஸ்ரீராம் கார்த்திக்கிடம் வேண்டுகோள் வைக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் ஶ்ரீராம் கார்த்திக், தனக்குள்ளான காதலை மறைத்து உன் போல் நட்புடன் பழகி வருகிறார். அவரது அக்கறையான அன்பு கிரிஷாவின் மனதை அசைக்கிறது. இப்போது காதல் இடம் மாறுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் திரிஷா சொன்ன அந்த காதலன் எதிர்பாராமல் ஊட்டி வர, இப்போது க்ரிஷாவின் நிலை என்ன? ஸ்ரீராமின் ரியாக்ஷன் என்ன? என்பது சுவாரசியம் குறையாத கிளைமாக்ஸ்.
நாயகனாக வரும் ஸ்ரீராம் கார்த்திக், அலட்டல் இல்லாத நடிப்பை படம் முழுக்க அள்ளித் தெளித்திருக்கிறார். நாயகியாக வரும் கிரிஷா குரூப், வெகுளித்தனமான நடிப்பாலும் கள்ளம் கபடம் அற்ற சிரிப்பாலும் தனக்கான நடிப்பில் கரை சேர்ந்து விடுகிறார்.

செந்தி, கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் கொடுத்த இடங்களில் நிறைவான நடிப்பை தந்து போகிறார்கள். முனிஷ்காந்த், சிங்கம்புலி சிரிக்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் செழியனுக்கு இம்மாதிரி கதைக் களம் அவரை தேர்ந்த சிற்பி ஆக்கிவிடும். இந்த கதைக் களத்தில் அது பரிபூரணமாக நிறைவேறி இருக்கிறது.

படத்தின் இன்னொரு இதம், இளையராஜாவின் இசை. திரைக்கதையில் நிறைந்திருக்கும் காதல் இவரது இசையில் வழிந்தோடி மனதுக்குள் மாயம் நிகழ்த்துகிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் அஜயன்பாலா. காதலை புதிய கோணத்தில் சொல்ல நினைத்தவர் அதில் பாதிக் கிணறு தாண்டி இருக்கிறார்.

ரேட்டிங்: 5/10.
Comments (0)
Add Comment