வடம்–திரை விமர்சனம்

ஊர் பெரிய மனிதரான நரேன், அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்றி அவற்றை தனது சொந்த கோசாலையில் வைத்து பராமரிக்கிறார். அவரது மகனான விமலுக்கும் மாடுகள் என்றால் தனி பிரியம். ஒரு முறை அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட உடல் குறைபாடுள்ள கன்றுக் குட்டியை, கோசாலையில் விடாமல் தனது வீட்டில் நேரடி பார்வையில் வைத்து பராமரிக்கும் விமல், அதற்கு பாண்டி முனி என்று பெயரிட்டு பயிற்சியளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக தயார்ப்படுத்துகிறார்
பல வருடங்களாக யாராலும் அடக்க முடியாத காளை என்ற பெருமையோடு வலம் வருகிறது பாண்டி முனி காளை.
இவர் மாதிரி மஞ்சுவிரட்டுக்கென்றே காளைகளை வளர்த்து வரும் நட்டி தனது அதிமேதாவித் தனத்தால் தவற விட்ட
காளையே இந்த பாண்டி முனி.
இவரது வீட்டு பசு ஈன்ற இரண்டு காளைக் கன்று களில் இதுவும் ஒன்று. கன்றுக் குட்டி பருவத்தில் இரண்டுக்கும் பயிற்சி அளித்த போது பாண்டி முனி பலவீனமாக இருந்ததை தொடர்ந்து அதை அடி மாட்டுக்கு அனுப்பி வைத்ததே இந்த நட்டி தான்.
ஆகாது என்று அவர் தள்ளிவிட்ட அந்த பாண்டி முனி தான் இப்போது எதிர் முகாமில் யாருமே வெல்ல முடியாத வெற்றி நாயகனாக வலம் வருவதை அறிந்த நட்டி, நரேன் இடம் அதை விலைக்கு கேட்கிறார். அவர் கொடுக்க மறுக்க, உருவாகிறது பகை.
ஒன்று அந்த பாண்டிமுனி காளை தனதாக வேண்டும்
இல்லையேல் இனி அது களம் இறங்கக் கூடாது. அதற்கான திட்டம் செயல்பட, லாரி மோதி பாண்டி முனி இப்போது தீவிர மருத்துவ சிகிச்சையில்.
ஆத்திரம் தலைக்கேற வீடு புகுந்து நட்டியை அடித்து விளாசி விட்டு வருகிறார் விமல்.
கொஞ்ச நேரத்திலேயே நட்டி உயிரிழந்த தகவல் தெரிய வர, அதைத்தொடர்ந்து சட்டம் செயல்பட, கொலை வழக்கில் விமல் இப்போது விசாரணை கைதியாக ஜெயிலில்.
ஒரு வழியாக நிபந்தனை ஜாமீன் கிடைத்து வெளியே வரும்போது நீதிமன்ற வளாகத்திலேயே ஒரு கும்பல் அவரைகொலை செய்ய முயற்சிக்க, அதிலிருந்து தப்பி வீடு வருகிறார். இதுபோக,விமலின் வீட்டில் பணியாற்றிய ஒருவரும் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார்.
காளை போராட்டம் இப்படி வாழ்க்கை போராட்டமாக மாறிய நேரத்தில்
நாயகி சனஷ்கா ஸ்ரீ-யின் காதல் அவரை
தேடி வர… அந்தக் காதலை ஏற்பவருக்கு காதலி மூலமே உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்படுகிறது.
அது என்ன ?, அந்த அதிர்ச்சியில் இருந்தும், தனக்கு எதிரான பகைமையில் இருந்தும் விமல் மீண்டாரா ?, அவரது காளை மீண்டும் மஞ்சுவிரட்டு களத்தில் சாதித்ததா ?என்பதை கமர்ஷியல் கலக்கலோடு தந்திருப்பதே இந்த வடம்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாக கொண்டு சில படங்கள் வந்த நிலையில் முதல் முறையாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகியிருக்கி
றது.
வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் மாடுகள் மீது பாசம் கொண்டவராகவும், காளை மாடுகளை மஞ்சுவிரட்டு போட்டிக்கு தயார்ப்படுத்துபவராகவும் விமல் வருகிறார். எந்த இடத்திலும் மிகை இல்லாத நடிப்பு இவர் ஸ்பெஷல். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷ விமலை ரசிக்க முடிகிறது.

நாயகியாக நடித்திருக்கும் சனஷ்கா ஸ்ரீ, பார்த்ததும் பிடித்துப் போகும் அழகோடு நடிப்பிலும் அளவோடு வலம் வருகிறார். விமலு டனான அவரது காதல் பின்னணியில் இருக்கும் இன்னொரு முகம் நிஜமாகவே அதிர்ச்சியூட்டுகிறது.
காளைகள் மற்றும் மஞ்சுவிரட்டு போட்டியை கெளரவமாகவும், பெருமையாகவும் கருதும் நட்டி நட்ராஜ், தன்னால் தோல்வியை தாங்க முடியாத அவமானம் சுமக்கிற அந்த நடிப்பில் விஸ்வரூபம் எடுக்கிறார்
காமெடி நடிகராகவே இதுவரை பார்த்து வந்த முனீஷ்காந்த், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக மனசுக்குள் இடம் பிடித்து விடுகிறார்.

விமலின் தந்தையாக நரேன் கம்பீரம்.
விமலின் அம்மாவாக இந்துமதி, அத்தையாக
தீபா சங்கர், உறவினராக பால சரவணன் பொருத்தமான பாத்திரங்களில் பளபளக்க, பகையாளியாக மதுசூதன ராவ் தன் பாணியில் மிரட்டுகிறார்.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் கேமரா மஞ்சுவிரட்டு காட்சிகளை நெஞ்சம் வரை கொண்டு சேர்த்து விடுகிறது.

இமானின் இசையில் எல்லா பாடல்களுமே சுகராகம். குறிப்பாக அlந்த பாதகத்தி பாட்டு, அடியாத்தி.

எழுதி இயக்கியிருக்கிறார் கேந்திரன்.வி.
சவாலான கதைக் களத்தை மஞ்சுவிரட்டு காளை பின்னணியில் எடுத்துக் கொண்டவர் அதை கொஞ்சமும் பிசிறின்றி காட்சிப்படுத்தி தேர்ந்த இயக்குனர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டு விடுகிறார். இந்த விதத்தில் தமிழ் சினிமாவில் இந்த படம் போட்டிருப்பது புதிய தடம்.
ரேட்டிங்: 5.8/ 10.

Comments (0)
Add Comment