கஞ்சா கடத்தியதாக இளைஞரொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்படுகிறார். அவ்ருடைய தந்தை செல்வாக்கானவர்; அடிக்கடிக்கு அஞ்சாதவர் என்று தெரிய வந்ததும், அவரை ஊருக்கு புறம்பே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கொண்டு போய் போட்டு விடுகிறார்கள்.
மறுநாள் அந்த இளைஞன் உயிரற்ற நிலையில் கிடக்க,
வெகுண்டெழுந்த இளைஞனின் தந்தையான முன்னாள் தாதா, இப்போது மீண்டும் அதிரடி அவதாரம் எடுக்கிறார். போலீஸ் தான் தன் மகனை திட்டம் போட்டுக் கொன்றதாக நம்பும் அவர், மகன் மரணத்துக்கு காரணமான நாலு போலீசாரின் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்ய தனது அடியாட்களை
ஏவுகிறார். அவர்களும் சம்பந்தப்பட்ட காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்களை தேடிப் பிடித்து கொல்லத் தொடங்குகிறார்கள். இந்த அத்துமீறலை காவல்துறை தடுத்து நிறுத்தியதா? உண்மையில் இளைஞனைக் கொன்றது யார்? கேள்விகளுக்கான விடையே இந்த போலீஸ் ஃபேமிலி.
நாயகனாக, நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட காவல் துறை அதிகாரியாக புதுமுகம் ராஜா மலைச்சாமி வருகிறார் தாதாவின் அடி அடியாட்களுக்கு பயந்து இரண்டு மகள்களுடன் அவர் உயிருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகள் திகில் மிக்கவை. இந்தக் காட்சிகளின் போது அவர் கண்ணில் தெரியும் உயிர் பயம் சிறந்த நடிகனின் அடையாளம். ஏற்றுக்கொண்டிருக்கும் காவல்துறை உதவிஆய்வாளர் வேடத்துக்கேற்ற மிடுக்கையும் நடிப்பில் காண முடிகிறது.
தாதா வேடத்தில் நடித்திருக்கும் சரவணன், தனது மகனுக்காக வன்முறையை விட்டொழித்த நிலையில், மகனின் மரணத்துக்கு பழிவாங்க மீண்டும் ஆயுதப் பாதைக்கு திரும்பும் இடத்தில் தேர்ந்த வில்லனாக நடிப்பில் தடம் பதிக்கிறார்.
திரைக்கதையின் திருப்பு முனை கேரக்டரில் காதல் சுகுமார். தனக்கே உரித்தான வழக்கமான காமெடியில் இருந்து விலகி, படத்தின் அச்சாணி கேரக்டருக்குள் தன்னை முழுக்க ஒப் படைத்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும்
காட்சிகள் குறைவு. ஆனாலும் வந்தவரை நிறைவு.
ஜெயகுமார் தங்கவேலின் கேமரா கதையுடன் இணைந்து அழகான பயணம் மேற்கொள்கிறது.
ஜெயா கே.தாஸ் இசையில் பாடல்கள் ஓகே. பரபரப்பை பற்றவைக்கும் அந்த பின்னணி இசையில் கதை நமக்குள் அழுத்தமாக கடந்து போகிறது.
காவல்துறையின் அதிகார போக்கில் களங்கம் என்று வருவதே விசாரணை கைதிகளின் மரணம் தான்.
அப்படி ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு கம்ப்ளைன்ட்டுக்கு இடமில்லாமல் காட்சிகளை தந்ததில் தேறிய இயக்குனராகவும் ஜொலிக்கிறார் பாலு. எம்.
பழிவாங்கும் படலத்துக்கு பின்னணியில் இருக்கும் அந்த
ட்விஸ்ட்டே மொத்தக் கதைக்கும் அடித்தளம் என்பதால் படம் போகிற போக்கில் போகாமல் இயல்பான பயணத்தை மேற்கொள்கிறது.
படத்தின் பிளஸ் : அந்த கொலை நோக்கு கூட்டணி.
படத்தின் கிளாஸ் : அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டும் திரைக்கதை.
ரேட்டிங்: 5.6/10.