காமெடி நடிகர் கொட்டாச்சி மகள் மானசி நாயகியாக அறிமுகமாகும் “பூ காய் கனி”*

விசிறி* படத்தை தயாரித்த A.ஜமால் சாகிப்பின் அடுத்த தயாரிப்பாக உருவாகி வருகிறது, ‘பூ காய் கனி’

1986 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் இப்படத்தை
அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு ,விசிறி, போன்ற படங்களை இயக்கிய.
இயக்குனர் *வெற்றிவீரன் மகாலிங்கம்இயக்குகிறார்.

இவர் சமீபத்தில் தான் அயலி வெப் தொடர் நட்சத்திரங்களுடன் விஜய் டிவி புகழ் நடித்த *சூட்கேஸ் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

மேலும் தற்போது முழுக்க முழுக்க மண்வாசத்துடன் எழுதி இயக்கும் படம் தான் பூ காய் கனி. தலைப்பிலேயே கவிதை சொல்லும் இயக்குனர் படமும் நிச்சயம் மனதை வருடும் அழகான திரைக்கதை கொண்ட படமாக இருக்கும் என்கிறார்.

சூட்கேஸ் படத்தின் நிர்வாக தயாரிப்பை கவனித்த ராஜேஸ்வரி வெற்றிவீரன்
பூ காய் கனி படத்தை பழையனூர் சந்தனம் பட கம்பெனி சார்பாக தயாரிக்கிறார்

பூ காய் கனி படத்தில் கதையின் நாயகனாக KCP மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமாகிறார்.
இவர் *அடியே வெள்ளழகி, ஏன் என்னை காதலிச்ச’ போன்ற இண்டிபெண்டண்ட் ஆல்பங்களில் நாயகனாக நடித்துள்ளார்

அதுமட்டும் இன்றி நாயகனுக்கு தேவையான முழு பயிற்சியையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது …

அடுத்ததாக கதையின் மையக்கருவாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பவர்.

உலக அளவில் பல விருதுகளைப் பெற்ற டூலெட் படத்தின் கதை நாயகனான சந்தோஷ் நம்பிராஜன் இந்தப் படத்தில் மலைக்கள்ளன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்தவர் மானசி காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகளான இவர் பூ காய் கனி படத்தில்.கதை நாயகியாக அடுத்த படிக்கட்டில் அடி எடுத்து வைக்கிறார்.

பூ காய் கனி படத்தின் இயக்குனர் வெற்றிவீரன் மகாலிங்கத்தின் மகனான ராஜூ மகாலிங்கம் ஐந்து வயதிலிருந்து புஷ்பா, ராயன், ஜவான் போன்ற பட படங்களில் பின்னணி குரல் கொடுத்தவர்.
அதர்வா நடித்த
தணல் படத்தில் வில்லன் அஸ்வினுக்கு மகனாக நடித்தவர்…
பூ காய் கனி படத்தில் நாயகனின் சிறு வயது பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் முக்கிய நிகழ்வாக மாயன் விருமாண்டி போன்ற படத்திற்குப் பிறகு கூத்துப்பட்டரையில் இருந்து பயிற்சி பெற்ற பத்துக்கும் அதிகமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையா

இசை
தன்ராஜ் மாணிக்கம்

பாடல்கள்: கருமாத்தூர் மணிமாறன்- வெற்றிவீரன் மகாலிங்கம்

பல வெற்றி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியது மட்டுமின்றி வல்லினம் படத்திற்கு தேசிய விருது பெற்ற V.J.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
பல முன்னணி நிறுவனங்களில் வியாபாரம் அனுபவம் பெற்ற
சோனி மாறன் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார்.

மக்கள் தொடர்பு:
ஆனந்த்

பப்ளிசிட்டி டிசைன்ஸ்: செல்வா

இணை தயாரிப்பு:
*குரு சின்னச்சாமி.

Comments (0)
Add Comment