தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி இயக்குநர் மிஷ்கின் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘ட்ரெயின்’.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள் ளார்.
ஒரு குறிப்பிட்ட இரவில், ஓடும் ரயிலுக்குள் இரண்டரை மணி நேர கால அளவில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.வாழ்க்கையில் விரக்தியடைந்த ஒரு நபர் ரயிலில் பயணிக்கும்போது, அங்கு நடக்கும் ஒரு பிணைக்கைதிகள் கடத்தல் சம்பவத்தில் சிக்கிக்கொள்கிறார். ஆயுதம் ஏந்திய கும்பலிடமிருந்து அவர் மற்றவர்களை எப்படி மீட்கிறார் என்பதை அதிரடி ஆக்ஷன் பாணியில் சொல்லி இருக்கிறார், மிஷ்கின்.
‘டிரெயின்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், நரேன், நாசர், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வழக்கமாகப் பிற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றும் இயக்குநர் மிஷ்கின், இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
‘டிரெயின்’ படத்தின் கிராபிக்ஸ் மற்றும் இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்த இதன் டீசர் மற்றும் ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘டிரெயின்’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி
எஸ் தாணு பேசுகையில்,
மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும் நான் கதை கேட்பேன் இந்த படத்திற்கு நான் கதை கேட்கவே இல்லை. இந்த படம் கால தாமதம் ஆனதற்கு நான் காரணம் இல்லை. இந்தப் படத்திற்கு தான் முதல் முறையாக பெரிய 8 கம்பார்ட்மென்ட்
அமைத்திருக்கிறோம். விஜய் சேதுபதி படத்துக்காக அயராது உழைத்தார். மனிதநேயத்தின் மறுபக்கம் உள்ளவர்.
63 நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
ட்ரெயின் திரைப்படத்தின் இயக்குநரும் இசையமைப்பாளருமான மிஷ்கின் பேசும்போது,
“நந்தலாலா கதை சொல்ல தாணு சாரை மீட் பண்ணினேன். ஆனா சார்க்கு கதை ஒண்ணுமே புரியல. ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது. பட் எங்களால் அப்பொழுது சேர்ந்து படம் பண்ண முடியல. அதற்கு பிறகு தான் தாணு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன். அவர், விஜய் சேதுபதியை வைத்து பண்ணலாம்ன்னு சொன்னார். ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி விஜய் சேதுபதி என்கிட்ட ரெண்டு நாள் ஒர்க் பண்ணாரு. அவர் நடிப்பு பிடிக்காமல் நான் அவருக்கு நோ சொல்லி அனுப்பிவிட்டேன். அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு. என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி. அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன். இந்தக் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன். இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது. கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல. படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க. விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது. எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு. ஒரு காட்சியை ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவாரு. நான் நாசர், நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன். ஆனால் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.
பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி . அந்தப் படம் வரும். அதுக்காக நான் காத்திருப்பேன். சினிமா அப்படித்தான் இருக்கும். இளையராஜா போன்று சுறுசுறுப்பான மனிதராக
தாணு சாரை பார்க்கிறேன்” என்றார்.
விஜய் சேதுபதி பேசுகையில்,
“எனக்கு பேசறதுக்கு
நிறைய வார்த்தை இல்ல. எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இந்த படம் எப்ப வரும்னு நாங்க காத்துட்டு இருந்தோம். தாணு சார் ஆகஸ்டுல கொண்டு வரேன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி!
நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும்போது மிஷ்கின் கிட்ட ஆடிஷன் போயிருக்கிறேன். அப்போ அவர் எதிர்பார்த்த நடிப்பு வரலன்னு என்னை அனுப்பி வச்சிட்டார். ஹீரோ ஆனதுக்கப்புறம் ஒரு டைம் என்னை கூப்பிட்டாரு. நான் டேட் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன். சைக்கோ படம் பார்த்ததுக்கு அப்புறம் இவரை எனக்கு ரொம்ப புடிச்சுச்சு. சைக்கோ படம் பார்த்து முடிச்சுட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன். எனக்கு ஒரு வாட்ச் கொடுத்தார். பிசாசு 2 படத்துல ரெண்டு நாள் வொர்க் பண்ணினேன். அதுக்கு அப்புறம்தான் ட்ரெயின் மூவி நடிச்சேன். செட் கலகலனு இருக்கும். மிஷ்கின் சார் நல்லா நடிக்கிறவங்களுக்
கும் நல்லா வேலை செய்றவங்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடு கொடுப்பார். அதனால எல்லோரும் சந்தோஷமா வேலை செஞ்சாங்க. தன்னை சுத்தி இருக்குற எல்லாரையும் சந்தோஷமா வச்சுப்பாரு.
இந்தப் படம் உங்களுக்கு திரில்லரா இருக்கும். ஆனா, எனக்கும் மிஷ்கின் சார்க்கும் ரொம்ப ரொமான்டிக். ஐ லவ் யூ மிஷ்கின் சார்! என் கூட நடிச்ச, எல்லாருக்கும் ரொம்ப நன்றி” என்றார்.