கமல் படத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் முன்னணி நடிகர்கள்

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கான பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து வழங்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் சென்னையில் தொடங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கமல் பிசியாகி விட்டார். இனி தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில், படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகி அதிர்ச்சி ஏற்படுத்தினார். தற்போது அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் படத்தில் இருந்து வெளியேற…

அதிர்ச்சியில் வெலவெலத்துப் போயிருக்கிறார், மணிரத்னம். பின்னே…படத்தின் இயக்குனர் அவர் தானே…