மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படத்திற்கு ‘பைசன் – காளமாடன்’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறார்கள். நாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் நடிக்க, இவர்களுடன் லால், பசுபதி, கலையரசன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள், அருவி மதன் ஆகியோரும் இருக்கிறார்கள்.
‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜுடன் தயாரிப்பாளராக கைகோர்த்திருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு, எழில் அரசு.கே ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டராக சக்திகுமார், மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும், ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. நடிகர் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.