ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தை ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், பாகுபலி ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் பிரதான நட்சத்திரங்கள்.
இந்தப் படம் பற்றி நடிகர் ராணா கூறுகையில், ‘ ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அது நடக்கும் என்று நினைக்கவில்லை. ‘வேட்டையன்’ படம் மூலம் அப்படியொரு வாய்ப்பு அமைந்தது. இது வழக்கமான ரஜினி படமாக இருக்காது. இது வித்தியாசமான படம். ரஜினி இதுபோன்ற கதையை தேர்ந்தெடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி. இது, நீதித்துறை, காவல்துறை, தொழில்துறை அமைப்புகளை பற்றிய விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும்” என்றார்.