ரஜினிகாந்த் தற்போது தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜு இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் 10ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
கூலி படத்தை தொடர்ந்து, மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதில் நாயகியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு மூத்த நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் முதல் பாகத்தின் போதே நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாகத் தகவல் வெளியானது. முதல் பாகத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் பாலகிருஷ்ணாவுக்கு முக்கிய வேடம் என்கிறார்கள்.