கிருஷ்ணா-சுவாதி நடிப்பில் பூஜையுடன் தொடங்கிய ‘தி மம்மி ரிட்டன்ஸ்’

Pepin de Raisin Productions தயாரிப்பில், P.J. கிஷோர் தயாரித்து, ஜெய் அமர் சிங் இயக்கும் புதிய திரைப்படம் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்”.

இந்தப் படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, ரெடின் கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன் மற்றும் விஜய் டிவி தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சாம் சி.எஸ் இசையமைக்கிறார். எடிட்டிங் – மணிகண்ட பாலாஜி, ஒளிப்பதிவு – கார்த்திக் சுப்பிரமணியன்.

கோமாவில் இருந்து பல வருடங்களுக்கு பிறகு விழித்தெழும் தாயை மீண்டும் இயல்பு வாழ்வுக்குள் கொண்டு வர, அவள் வாழ்ந்த 1990-களின் உலகத்தை தன் நண்பர்களுடன் சேர்ந்து மகன் உருவாக்குகிறான். அந்த முயற்சியில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களும், குழப்பங்களும் தான் இந்தப் படத்தின் கதைக் களம். உணர்ச்சியும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடியும் கலந்த ஒரு முழு குடும்ப பொழுதுபோக்கு படமாக இதை உருவாக்குகிறார்கள்.

பூஜையுடன் தொடங்கிய பட விழாவில் படக் குழுவினருடன் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினர்.

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் விஷ்ணுவர்தன் மற்றும் I. அகமது ஆகியோர் கலந்து கொண்டு, படக் குழுவுக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.