அறிமுக இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மாயபிம்பம்’. காதலை புதிய கோணத்தில் சொல்லி இருக்கும் இந்தப் படம் கடந்த 23ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்பாகவே ‘மாயபிம்பம்’ பட இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கத்தில், படம் தயாரிக்க இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புதிய முகங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நம்பிக்கையுடன் பெரிய வாய்ப்புகளை வழங்கி வருவது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. அந்த வரிசையில், ’மாயபிம்பம்’ திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், படத்தின் இயக்குநரின் முயற்சியையும், கதை சொல்லும் விதத்தையும் மனதார பாராட்டி, அவருக்கு உடனடியாக தங்கள் பட நிறுவனம் மூலம் புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார்.
புதிய இயக்குநர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த அணுகுமுறை, வேல்ஸ் ஃபிலிம்ஸின் தயாரிப்பு முக்கிய நோக்கத்தை, மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.
தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன், நடிகர்–இயக்குநர் RJ பாலாஜி, டயங்கரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகும் VJ சித்து உள்ளிட்ட பல திறமைவாய்ந்தவர்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வித்தியாசமான களங்கள், புத்தம் புதிய ஐடியாக்கள், இளம் படைப்பாளிகளின் கனவுகளை நிஜமாக்கும் முயற்சிகள் ஆகியவை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தை, தனித்துவமான நிறுவனமாக மாற்றியுள்ளன
சமீபத்தில் மாயபிம்பம் படம் பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், இயக்குநரின் நேர்மையான முயற்சியையும், குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் கதையை அணுகிய விதத்தையும் பாராட்டியுள்ளார். “ஒரு புதிய இயக்குநர், முற்றிலும் புது முகங்களை வைத்துக்கொண்டு எளிமையான ஆனால் தாக்கம் கொண்ட கதையை சொல்லியுள்ளார் எனப் பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக அமைந்தது.
ஒருபுறம் பல புதிய படைப்புகள் வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் உருவாகிக் கொண்டிருக்க, மறுபுறம் ’மாயபிம்பம்’ படத்தின் இயக்குநர் K. J. Surender இயக்கும் புதிய படம் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.