நடிகை குஷ்பு , இயக்குநர் சுந்தர் சி. தம்பதியரின் மகள் அவந்திகா சுந்தர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.
அவந்திகா நடிக்கவுள்ள முதல் படத்தின் பூஜை திருச்சூர், சாவக்காடு பகுதியில் நடைபெற்றது.
படத்திற்கு ‘ஆரம்பம்’ என பெயரிடப்பட்டுள்ளது.பெரிய நட்சத்திரங்கள் இணையும் இப்படத்தை ஸ்டுடியோ பெல்லாரூ தயாரிக்கிறது. சுஜேஷ் ஆனி ஈப்பன் இயக்குகிறார்.